Ad Code

Responsive Advertisement

மத்திய அரசு சார்பில் வேலைவாய்ப்பு இணையதளம்: அமைச்சர் கல்ராஜ் மிஸ்ரா தொடக்கி வைத்தார்.

மத்திய அரசின் சார்பில் திறமையுள்ளவர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளை அடையாளம் காண உதவும் வகையில் வேலைவாய்ப்பு இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.

www.niesbudnaukri.com என்ற அந்த இணையதளத்தை மத்திய சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சர் கல்ராஜ் மிஸ்ரா இன்றுதொடங்கி வைத்துள்ளார். இந்த இணையதளத்தில் வேலைக்கு ஆள் தேவை என நிறுவனங்கள் இலவசமாக தகவல் வெளியிட வழி செய்யப்பட்டுள்ளது.மேலும் வேலை தேடுவோரும் இலவசமாக பெயர் மற்றும் விவரங்களை பதிவு செய்து கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. சுமார் 150 பிரிவுகளின் கீழ் வேலைவாய்ப்புகள் குறித்த தகவல்கள் இந்த இணையதளத்தில் இடம்பெறும் என்று அமைச்சர்கல்ராஜ் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement