Ad Code

Responsive Advertisement

90 சதவீத தனியார் கல்லூரிகள் கட்டட அனுமதி பெறவில்லை

தனியார் கல்லூரிகளில் 90 சதவீதம் முறையான கட்டட அனுமதி பெறாமல் கட்டப்பட்டுள்ளன என்று வீட்டுவசதித் துறை அமைச்சர் ஆர்.வைத்திலிங்கம் கூறினார்.
சட்டப்பேரவையில் வியாழக்கிழமை வீட்டுவசதித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் பொன்னுபாண்டி பேசுகையில் பல பள்ளி, கல்லூரிகள் முறையான அனுமதி பெறாமலே கட்டடங்களைக் கட்டியுள்ளன என்றார்.

அப்போது குறுக்கிட்டு அமைச்சர் வைத்திலிங்கம் கூறியது:-

தனியார் கல்லூரிகள் 90 சதவீதம் முறையான அனுமதி பெறாமலே கட்டடங்களைக் கட்டியுள்ளன. மாணவர்கள் பலர் படித்து வருகின்றனர். அதனால் என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்கலாம் என்பது தொடர்பாக ஆலோசித்து வருகிறோம். அதே சமயம் கட்டட அனுமதி வாங்க வேண்டும் என்றும் வலியுறுத்துவோம் என்றார் அவர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement