Ad Code

Responsive Advertisement

9–ம் வகுப்பு மாணவியை கற்பழித்த உடற்பயிற்சி ஆசிரியருக்கு தர்மஅடி பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்

மைசூரில் 9–ம் வகுப்பு மாணவியை கற்பழித்த உடற்பயிற்சி ஆசிரியரை பிடித்து பொதுமக்கள் தர்மஅடி கொடுத்தனர். பின்னர் அவரை போலீசில் ஒப்படைத்தனர்.


மாணவி கற்பழிப்பு

சாம்ராஜ்நகரை சேர்ந்தவர் பிரம்மதேவ். இவர் மைசூர் நகர் சரஸ்வதி புராவில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் பள்ளியில் உடற்பயிற்சி ஆசிரியராக வேலை செய்து வருகிறார். இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அந்த பள்ளியில் 9–ம் வகுப்பு படித்து வரும் ஒரு மாணவியை வலுக்கட்டாயப்படுத்தி கற்பழித்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று  மாணவி, தான் கற்பழிக்கப்பட்டது பற்றி தனது பெற்றோரிடம் அழுதுக்கொண்டே கூறினாள். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் பொதுமக்கள்  காலை தனியார் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உடற்பயிற்சி ஆசிரியருக்கு தர்மஅடி

மேலும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், உடற்பயிற்சி ஆசிரியருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார். அதைத்தொடர்ந்து அவர்கள் உடற்பயிற்சி ஆசிரியர் பிரம்மதேவை பிடித்து தர்மஅடி கொடுத்தனர். இதனால் பள்ளி வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்ததும் சரஸ்வதிபுரா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் மாணவியை கற்பழித்த உடற்பயிற்சி ஆசிரியர் பிரம்மதேவை கைது செய்தனர்.

பரபரப்பு

 இதுகுறித்து சரஸ்வதிபுரா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் சரஸ்வதிபுரா பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement