Ad Code

Responsive Advertisement

5,565 அங்கன்வாடி மையங்கள் கற்றல் மையங்களாக தரம் உயர்வு

முதல்வர் ஜெயலலிதா நேற்று பேரவையில் 110வது விதியின் கீழ் வெளியிட்ட அறிக்கை: 

தமிழகத்தில் 54,439 அங்கன்வாடி மையங்கள் மூலம் ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகள், வளரிளம் பெண்கள், கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் முதியோர் உதவித்தொகை பெறுவோர் என மொத்தம் 35 லட்சத்து 36 ஆயிரத்து 705 பேர் பயன் அடைந்து வருகின்றனர்.

* அங்கன்வாடி மையங்கள் மூலம் பயனடைந்து வரும் 6 மாதம் முதல் 60 மாதம் வரையிலான குழந்தைகள் குதூகலமான சூழலில் வளர, அங்கன்வாடி மையங்களை ‘எழுச்சிமிகுமுன் பருவ குழந்தை வளர் ச்சி மற்றும் கற்றல் மையங்களாக‘ தரம் உயர்த்தப்படும். முதற்கட்டமாக, 5,565 அங்கன்வாடி மையங்கள் ரூ.55 கோடியே 65 லட்சம் செல வில் தரம் உயர்த்தப்படும்.

* அங்கன்வாடி மையங்கள் அனைத்திலும், காய்ச்சல் அறிகுறி உள்ள குழந்தைகளுக்கு காய்ச்சலின் அளவை அறிந்து கொள்ள மின்னணு வெப்பமானி, காயத்திற்கு கட்டும் துணியை வெட்டும் கத்திரிக்கோல், காயத்திற்கு கட்டும் துணி அடங்கிய முதலுதவி பெட்டிகள் ரூ.2 கோடியே 50 லட்சம் செலவில் வழங்கப்படும்.

* அங்கன்வாடி மையங் களை ‘மழலையர் பராமரிப்பகங்களாக’ தரம் உயர்த்தப்படும். முதற்கட்டமாக பெரம்பலூர், கன்னியாகுமரி, சென்னை, புதுக்கோட்டை, திண்டுக்கல், காஞ்சிபுரம், திருவள்ளூர், கோவை, திருவண்ணாமலை, திருநெல் வேலி, சேலம், வேலூர்,விழுப்புரம் ஆகிய 13 மாவட்டங்களில் மொத்தம் 211 அங்கன்வாடி மையங்கள் ரூ.2 கோடியே 31 லட்சம் செலவில் மழலையர் பராமரிப்பகங்களாக தரம் உயர்த்தப்படும்.

* பெண் கல்வியை மேம்படுத்தவும், பெண் சிசு கொலையை ஒழிக்கவும், சிறு குடும்ப முறையை ஊக்கப்படுத்தவும் முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் 1992ம் ஆண்டு தொடங்கப்பட்டது. கூலி தொழிலாளர்கள், அமைப்புசாரா தொழிலாளர்கள், தனியார் மருத்துவமனைகளில் பணிபுரியும் செவிலியர், கடைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள், தங்கும் விடுதிகளில் பணிபுரிவோர், உணவகம், பெட்டிக்கடை நடத்துபவர்கள், தெரு வியாபாரிகள், தனியார் மழலையர் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், ஆட்டோ ஓட்டு நர்கள் போன்றோர் மாத வருமானம் சுமார் ரூ.5000 வீதம், ஆண்டு வருமானம் ரூ.60,000 வரை ஈட்டும் சாதாரண பிரிவை சேர்ந்தவர்களாகவே உள்ளனர். இவர்களும் இந்த திட்டத்தின் கீழ் பயன்பெறும்வகையில், இரு திட்டங்களுக்கும் பொதுவாக ரூ.72 ஆயிரம் உச்ச வரம்பு நிர்ணயிக்கப்படும். இதற்காக ரூ.31 கோடி கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement