Ad Code

Responsive Advertisement

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மானியக்கோரிக்கை அறிவிப்பு : கேட் தேர்வு எழுதுவதற்கான ஆயத்த பயிற்சி அளிக்க ஒரு மாணவருக்கு ரூ.50 ஆயிரம் வழங்கப்படும்.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மானியக்கோரிக்கையின் போது அமைச்சர் என்.சுப்பிரமணியன் வெளியிட்ட அறிவிப்பு:
* ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளியில் சாரணியர், சாரணியர் இயக்கத்தினை செயல்படுத்த ஒரு பள்ளிக்கு ரூ.55 ஆயிரம் வீதம் 207 பள்ளிகளுக்கு 113.85 லட்சம் செலவிடப்படும்.
* ஆதிராவிடர் நலப்பள்ளிகளை பராமரிக்கும் வகையில் ஒரு பள்ளிக்கு ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் வழங்கப்படும்.
* மலைப்பகுதியில் இயங்கி வரும் அரசு பழங்குடியினர் உண்டி உறைவிட உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு ( 6 முதல் 12ம் வகுப்பு வரை) �சோலார் லேம்ப்� வழங்கப்படும்.
* ஓவ்வொரு ஆண்டும் சுமார் 100 பொறியியல் பட்டதாரிகளை தேர்வு செய்து, தகுதியின் அடிப்படையில் �கேட்� தேர்வு எழுதுவதற்கான ஆயத்த பயிற்சி அளிக்க ஒரு மாணவருக்கு ரூ.50 ஆயிரம் வழங்கப்படும்.
* ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல விடுதிகளுக்கு, உண்டி உறைவிட பள்ளிகளுக்கு தலா ஒரு முதலுதவி பெட்டி ரூ.3400 விலையில் வழங்கப்படும்.
* மனிதநேய வார விழாவை மாவட்டங்களில் நடத்த தற்போது வழங்கப்படும் ரூ.15 ஆயிரம், ரூ.50 ஆயிரமாகவும், மாநில அளவில் விழாவை நடத்த ரூ.65 ஆயிரம் என்பது 1 லட்சமாகவும் உயர்த்தி வழங்கப்படும்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement