Ad Code

Responsive Advertisement

தமிழகத்தில் இரண்டே ஆண்டுகளில் 4 அரசு பொறியியல் கல்லூரிகள் உட்பட 54 அரசு கல்லூரிகள் தொடங்க முதலமைச்சர் ஜெயலலிதா நடவடிக்கை எடுத்திருப்பதாக சட்டப்பேரவையில் பாராட்டு.


தமிழகத்தில் இதுவரை எந்த அரசும் செய்யாத சாதனையாக, இரண்டே ஆண்டுகளில் 4 அரசு பொறியியல் கல்லூரிகள் உட்பட 54 அரசு கல்லூரிகள் தொடங்க, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா நடவடிக்கை எடுத்திருப்பதாக சட்டப்பேரவையில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
தமிழக சட்டப்பேரவையில் இன்று, உயர்கல்வித்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தின்போது குறுக்கிட்டுப் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் திரு. P. பழனியப்பன், இவ்வாறு பாராட்டுத் தெரிவித்தார். போடி, தருமபுரி, தஞ்சாவூர், திருச்சி - ஸ்ரீரங்கம் ஆகிய 4 இடங்களில் அரசு பொறியியல் கல்லூரிகளை தொடங்குவதற்காக, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா 212 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்திருப்பதை அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

கல்வித்துறைக்கு முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவைபோல, வேறு எவரும் சிறப்புகள் செய்ததில்லை என அ.இ.அ.தி.மு.க. உறுப்பினர் ராஜலட்சுமி புகழாரம் சூட்டினார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement