Ad Code

Responsive Advertisement

பிளஸ் 2 முடித்தவர்களுக்கு பரிசு தொகை: விண்ணப்பங்கள் வரவேற்பு

பிளஸ் 2 தேர்வில், மாநில அளவில், முதல், 500 இடங்களை பெற்ற, மாணவர்கள் மற்றும் மாணவியரிடம் இருந்து, பரிசுத் தொகை பெற, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

செய்தி மக்கள் தொடர்பு துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு: பிளஸ் 2 தேர்வில், மாநில அளவில், அதிக மதிப்பெண் பெறும், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினர் மற்றும் சிறுபான்மையினரில், முதல், 500 இடங்களைப் பெறும் மாணவர்கள், முதல், 500 இடங்களைப் பெறும் மாணவியர், பட்டப்படிப்பு அல்லது பட்டயப்படிப்பு முடிக்கும் வரை, ஆண்டுக்கு, 3,000 ரூபாய், பரிசுத் தொகை வழங்க, முதல்வர் உத்தரவிட்டுள்ளார். நடப்பாண்டு, இத்திட்டத்தை செயல்படுத்த, கடந்த மார்ச் மாதம் நடந்த தேர்வில், தமிழ் மொழியை, ஒரு பாடமாக படித்து, தேர்வு எழுதி, 1,173 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற மாணவர்கள், 1,176 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற மாணவியர் விண்ணப்பிக்கலாம். அவர்கள், பல்வேறு சான்றுகளின் நகல்களுடன், தாங்கள் பிளஸ் 2 படித்த, மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை, உடனடியாக தொடர்பு கொள்ள வேண்டும். இவ்வாறு, செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement