Ad Code

Responsive Advertisement

பாரதியார் பல்கலை: எம்.எட். நுழைவுத் தேர்வு ஜூலை 27ல் மாற்றம்

பாரதியார் பல்கலைக்கழகத்தின் தொலைதூரக்கல்வி இயக்ககத்தில் எம்.எட். நுழைவுத்தேர்வு தேதி ஜூலை 27- ஆம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பாரதியார் பல்கலைக்கழகத்தின் தொலைதூரக்கல்விக் கூடத்தின் எம்.எட். படிப்பில் சேருவதற்கான நுழைவுத்தேர்வு ஜூலை 20-ஆம் தேதி தமிழகம் முழுவதும் பல்வேறு மையங்களில் நடைபெறுவதாக இருந்தது.
அதே நாளில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வும் நடைபெற உள்ளது. எனவே, நுழைவுத்தேர்வை வேறு தேதியில் வைக்க வேண்டும் என்று விண்ணப்பதாரர்களிடம் வேண்டுகோள் வந்தது. அதையேற்ற பல்கலைக்கழகம், நுழைவுத்தேர்வு தேதி 20-ம் தேதிக்குப் பதிலாக 27-ஆம் தேதி நடத்தப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு, பாரதியார் பல்கலைக்கழகத்தின் http://www.b- u.ac.in/இணையதளத்தைப் பார்த்து தெரிந்துகொள்ளலாம்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement