Ad Code

Responsive Advertisement

பாரதியார் பல்கலை - பகுதிநேர பிஎச்.டி., படிப்பு 26ல் நுழைவுத் தேர்வு

பாரதியார் பல்கலையின் பகுதிநேர பிஎச்.டி., படிப்புக்கான நுழைவுத் தேர்வு, வரும் 26, 27ம் தேதிகளில் நடக்கிறது. பாரதியார் பல்கலையின் கீழ் உள்ள 32 துறைகளில் உள்ள பகுதிநேர பிஎச்.டி., படிப்புக்கு, 1,000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் விண்ணப்பித்திருந்தனர்.


இவர்களுக்கு நுழைவுத்தேர்வில் பங்கேற்பதற்கான அழைப்புக் கடிதம்,10ம் தேதி அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில், 32 துறைகளுக்கான நுழைவுத் தேர்வு, வரும் 26, 27ம் தேதிகளில் நடக்கிறது. வணிகவியல், கம்ப்யூட்டர் சயின்ஸ், ஆங்கிலம், மேலாண்மை ஆகிய படிப்புகளுக்கு இரு நாட்கள் தேர்வு நடக்கிறது. காலை 10.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை நடக்கும் நுழைவுத் தேர்வில், எழுத்து மற்றும் வாழ்மொழித் தேர்வு இடம்பெறுகிறது.
தேர்வுக்கு வருபவர்கள் அனைத்து உண்மைச் சான்றிதழ்களையும் கட்டாயம் கொண்டுவர வேண்டும். விபரங்களுக்கு, 0422 2428130,2423650 என்ற தொலைபேசி எண்களில் தொடர்புகொள்ளலாம். மேலும், பாரதியார் பல்கலையின் www.bu.ac.in என்ற இணையதளத்திலும் தெரிந்துகொள்ளலாம்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement