Ad Code

Responsive Advertisement

15 நாட்களில் 20 ஆயிரம் ஆசிரியர்கள் நியமனம் -தினத் தந்தி

ஈரோடு, ஜூலை.13-இன்னும் 15 நாட்களில் 20 ஆயிரம் ஆசிரியர்கள் பணியமர்த்தப்படுவார்கள் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்தார்.



பரிசளிப்பு விழாஈரோடு மாவட்டம் பெருந்துறையில் 2013-2014ம் கல்வி ஆண்டில் மாநில அளவில் அரசு பொதுத்தேர்வில் ஈரோடு மாவட்டம் முதல் இடம் பெற்றமைக்காக பள்ளிக்கூட தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு விழாவும், எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 தேர்வில் ஈரோடு மாவட்ட அளவில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளுக்கு பரிசளிப்பு விழாவும் நேற்று நடைபெற்றது.பொதுத் தேர்வுகளில் அதிக தேர்ச்சி விகிதம் அளித்த அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் 234 பேர் சார்பில் கல்வி அதிகாரிகளுக்கு அமைச்சர் வீரமணி பரிசுகளை வழங்கி பேசினார். 

அப்போது அவர் பேசியதாவது:- 

20 ஆயிரம் ஆசிரியர்கள்முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆட்சி பொறுப்பை ஏற்ற உடன் தமிழகம் அனைத்து துறைகளிலும் தன்னிறைவு அடைய வேண்டும் என்கிற நோக்கில் விஷன்-2023 திட்டத்தை அறிவித்தார். அந்த திட்டத்தின் முதல் படியாக கல்வி மற்றும் மருத்துவத்துறையை அறிவித்தார். அதன்படி கல்வித்துறைக்காக ரூ.17 ஆயிரத்து 737 கோடி நிதி ஒதுக்கீடு செய்து சாதனை படைத்து உள்ளார்.முதல்-அமைச்சரின் சீரிய பணியால் அனைத்து திட்டங்களும் மக்களை சென்றடைந்து வருகின்றன. 

மாணவ-மாணவிகளுக்கு ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள மடிக்கணினிகள் விலையில்லாமல் வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை கல்வித்துறையில் 51 ஆயிரம் ஆசிரியர்கள் பணி நியமனம் பெற்றுள்ளனர். இன்னும் 15 நாட்களில் 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் பேர் வரை ஆசிரியர் பணியில் நியமிக்கப்பட உள்ளனர்.இவ்வாறு அவர் பேசினார்.

சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் பொதுத்தேர்வுகளில் மாவட்ட அளவில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளுக்கு பரிசு வழங்கி பேசினார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement