Ad Code

Responsive Advertisement

மறுகூட்டலில் 12 மதிப்பெண் அதிகரிப்பு:மாநில 'ரேங்க்' பெற்றார் மதுரை மாணவி


பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் மறுகூட்டலில் மதுரை மாணவி செர்ரி ரூத், 12 மதிப்பெண் கூடுதலாக பெற்று, மாநில அளவில் மூன்றாம் இடம் பிடித்தார்.

மதுரை மாவட்டத்தில், 10ம் வகுப்பு மறுகூட்டலுக்கு, 521 பேர் விண்ணப்பித்தனர். இதில், 485 மதிப்பெண் பெற்ற சி.இ.ஓ.ஏ., பள்ளி மாணவி செர்ரி ரூத், தமிழ் பாடத்திற்காக விண்ணப்பித்தார்.மறுகூட்டலில், 27 பேருக்கு மதிப்பெண்கள் அதிகரித்தன. இதில், செர்ரி ரூத்திற்கு, 12 மதிப்பெண் அதிகரித்து, அவரது மொத்த மதிப்பெண், 497 ஆனது; இது, மாநில அளவில் மூன்றாவது ரேங்க். மாணவியை பள்ளி தலைவர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.மாணவியின் தந்தை, மத்திய கலால் மற்றும் சுங்கவரி இன்ஸ்பெக்டர் விக்டர் தனராஜ் கூறியதாவது:தமிழ் பாடத்தில் முதல் தாளில், 98, இரண்டாம் தாளில், 73 மதிப்பெண் பெற்றார். பின் மறுகூட்டலில், இரண்டாம் தாளில் மட்டும், 25 மதிப்பெண் கூடுதலாக பெற்றதால், தமிழில், 98 மதிப்பெண் பெற்றுள்ளார். இதன் மூலம் மாநில ரேங்க் கிடைத்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.இவ்வாறு, அவர் கூறினார்.மதுரை முதன்மை கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதயசாமி கூறுகையில், ''சம்பந்தப்பட்ட மாணவியின் மொத்த மதிப்பெண், 497 ஆக அதிகரித்துள்ளது. மாநிலத்தில் மூன்றாவது ரேங்க் என்பதை, கல்வி இயக்குனர் தான் அறிவிக்கவேண்டும்,'' என்றார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement