Ad Code

Responsive Advertisement

சிவில் சர்வீஸ் பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் 1,112 பேர்!

மத்திய பணியாளர் தேர்வாணையம்(யு.பி.எஸ்.சி), 4 வகையான சிவில் சர்வீஸ் பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள நபர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. 

அதன்படி, மொத்தம் 1,112 பேர் மேற்கண்ட பணிகளில்நியமிக்கப்பட பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர்.ஐ.ஏ.எஸ்., ஐ.எப்.எஸ்., ஐ.பி.எஸ். மற்றும் குரூப் ஏ மற்றும் பி வகை மத்திய பணிகள் ஆகியவைதான் அவை. 

இந்தப் பட்டியலில், கவுரவ் அகர்வால் என்பவர் முதலிடம் பிடித்துள்ளார்.இரண்டாமிடத்தை முனிஷ் சர்மா என்பவரும், மூன்றாமிடத்தை ரசித் ராஜ் என்பவரும் பெற்றுள்ளனர்.3 அடுக்குகளாக நடத்தப்பட்ட சிவில் சர்வீஸ் தேர்வில், பொதுப்பிரிவில் இருந்து 517 பேரும், OBC பிரிவிலிருந்து 326 பேரும், SC பிரிவிலிருந்து 187 பேரும், ST பிரிவிலிருந்து 92 பேரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.மொத்தம் 1,112 பேரில், 180 பேர் IAS பணிக்கும், 32 பேர் IFS பணிக்கும், 150 பேர் IPS பணிக்கும், 710 பேர்குரூப் ஏ மத்திய பணிக்கும், 156 பேர் குரூப் பி மத்திய பணிக்கும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

முடிவுகளை www.upsc.gov.in என்ற வலைதளத்தில் விரிவான அறிந்து கொள்ளலாம் மற்றும் மதிப்பெண் விபரங்கள் 15 நாட்களுக்குள் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement