Ad Code

Responsive Advertisement

11, 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 32 ஆயிரம் செய்முறை ஏடுகள்: மாநகராட்சி வழங்கியது

சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் பயிலும் 11, 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 32 ஆயிரம் செய்முறைப் பயிற்சி ஏடுகளை வழங்கும் திட்டத்தை மாநகராட்சி புதன்கிழமை தொடங்கியது.



இது குறித்து மாநகராட்சி வெளியிட்ட செய்திக் குறிப்பு: 2014-15-ஆம் கல்வியாண்டுக்கான விலையில்லா செய்முறைப் பயிற்சி ஏடுகளையும், சென்னை தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு வழங்கும் திட்டத்தை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி புதன்கிழமை தொடங்கிவைத்தார்.

மேலும் விலையில்லா தேர்வு விடைத்தாள்களையும் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அவர் வழங்கினார்.

குறித்த காலத்தில் மாணவர்கள் செய்முறை ஏடுகளை ஒப்படைக்க ஏதுவாக, சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் பயிலும் 11, 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 32 ஆயிரம் செய்முறை பயிற்சி ஏடுகள் வழங்கப்படுகின்றன.

மேலும் தேர்வு விடைத்தாள்களை மாணவர்கள் விலை கொடுத்து வாங்கும் நிலை இருப்பதால், தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் 85 ஆயிரம் மாணவர்கள் தேர்வுகள் எழுத விலையில்லா விடைத்தாள்கள் சென்னை மாநகராட்சி பெயர் மற்றும் முத்திரையுடன் வழங்கப்படுகின்றன.

இவை அனைத்தும் சென்னை மாநகராட்சி அச்சகத்தில் அச்சிடப்பட்டவை.

ஏடுகள் வழங்கும் நிகழ்ச்சியில், துணை மேயர் பா. பெஞ்சமின், மாநகராட்சி ஆணையர் விக்ரம் கபூர், துணை ஆணையர் (கல்வி) ஆர். லலிதா உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement