Ad Code

Responsive Advertisement

10ம் வகுப்பு செய்முறை பயிற்சி அட்டவணை வெளியீடு!

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, அறிவியல்
பாடத்திற்கான செய்முறை பயிற்சி அட்டவணை, பள்ளிக்கல்வித்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும், அரசு, அரசு உதவி பெறும், சுயநிதி பள்ளிகளில் படிக்கும், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, அறிவியல் பாடத்திற்கான செய்முறை பயிற்சி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது

இதில், வேதியியல், இயற்பியல், உயிரியல் பாடப்பிரிவுகளில், ஆசிரியர்கள் பயிற்சி அளிக்க வேண்டிய பகுதிகள், மாணவர்கள் பயிற்சி பெற வேண்டிய பகுதிகள் குறித்து, பள்ளி வாரியாக முதன்மை கல்வி அலுவலர்கள் மூலம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த பயிற்சிகளை, செப்டம்பர் மாதம் வரை முதல் பிரிவாகவும், டிசம்பர் வரை இரண்டாவது பிரிவாகவும் நடத்த, அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பாடவாரியாக பயிற்சி அளிக்கப்பட்ட நாட்கள், மாணவர்கள் செய்முறை வகுப்புகளில் பங்கேற்ற நாட்கள் குறித்து, தலைமையாசிரியர்கள் கண்காணித்து, அறிக்கை அனுப்பவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அரசு பள்ளி அறிவியல் பாட ஆசிரியர்கள் சிலர் கூறுகையில், 'செய்முறை பயிற்சிக்கான அட்டவணை, பள்ளிகளுக்கு வந்துள்ளது. இதில், இயற்பியல் பிரிவில், நான்கு தலைப்புகளுக்கான பயிற்சியில், ஆசிரியர்கள் செய்து காட்ட, ௧௯ வகுப்புகளும், மாணவர்கள் பயிற்சி பெற, ௫௬ வகுப்புகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. இதேபோல், வேதியியல் பிரிவில், ஐந்து தலைப்புகளுக்கான பயிற்சியில், ஆசிரியர்கள் செய்து காட்ட, ௨௮ வகுப்புகள், மாணவர்கள் பயிற்சி பெற, ௫௩ வகுப்புகளும், உயிரியலில், எட்டு தலைப்புகளில், ஆசிரியர்களுக்காக, ௧௦ வகுப்புகளும், மாணவர்கள் பயிற்சிக்காக, ௪௪ வகுப்புகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த வகுப்புகளில், மாணவர்களது பயிற்சி தகவல்கள், அறிக்கைப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது' என்றனர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement