Ad Code

Responsive Advertisement

'தினமலர்' செய்தி எதிரொலி: 10ம் வகுப்பு பாடத்தில் திருத்தம்

தினமலர்' செய்தி எதிரொலியாக கடந்தாண்டு பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில், 'காமராஜர் பிறந்த ஊர், விருதுபட்டி' என்ற தவறு, நடப்பு கல்வியாண்டில் 'விருதுநகர்' என திருத்தப்பட்டுள்ளது.
கடந்தாண்டு பத்தாம் வகுப்பு சமூகஅறிவியல் பாடத்தில், 'காமராஜர் பிறந்த ஊர் விருதுநகர் அருகே விருதுபட்டி' என தவறுதலாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதுகுறித்து கடந்தாண்டு ஜூன் 22ல், 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது. அதனடிப்படையில் பள்ளிக்கல்வித் துறை எடுத்த நடவடிக்கை யால், தவறு திருத்தப் பட்டுள்ளது.கீழக்கரை வரலாற்று ஆய்வாளர் ஆனாமூனா சுல்தான் கூறுகையில், ''இந்த கல்வியாண்டிற்கான 10ம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் காமராஜர் பிறந்த ஊரான விருதுபட்டி என்பது, விருதுநகர் என, மாற்றப்பட்டுள்ளது, என்றார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement