Ad Code

Responsive Advertisement

100 ரூபாயில் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கலாம்'!!

பொதுச்சேவை மையங்களில், 100 ரூபாய் செலுத்தி, பாஸ்போர்ட்டுக்குவிண்ணப்பிக்கும் முறை, சென்னை பாஸ்போர்ட் மண்டல பகுதியில் அமல்படுத்தப்படுகிறது' என, சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலர், செந்தில் பாண்டியன் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:பாஸ்போர்ட் விண்ணப் பங்களை ஆன்--- - லைனில் மட்டுமே அனுப்ப வேண்டும். பாஸ்போர்ட் தொடர்பான பிற விவரங்களை, பாஸ்போர்ட் அலுவலகத்தில் பெற, முன் அனுமதியையும்,ஆன் - லைனிலேயே பெற வேண்டும் என்ற நடைமுறை அமலில் உள்ளது.கிராமப்புறங்களில் உள்ளவர்களுக்கு, இம்முறை கூடுதல் சிரமங்களை ஏற்படுத்துகிறது. இவர்களுக்கு உதவும் வகையில், பொது சேவை மையங்களில், பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கும் வசதி அளிப்பதை, மத்திய அரசு கட்டாயமாக்கி உள்ளது. இதையடுத்து, சென்னை பாஸ்போர்ட் மண்டலத்துக்கு உட்பட்ட, தர்மபுரி, கிருஷ்ண கிரி, திருவண்ணாமலை, வேலுார் மாவட்ட மக்கள், பாஸ்போர்ட் விண்ணப்பங்களை, பொது சேவை மையங்களில் அனுப்ப, வசதி செய்யப்பட உள்ளது. பொது சேவை மையங்கள், பாஸ்போர்ட் விண்ணப்பங்களை கம்ப்யூட்டர் மூலம், பூர்த்தி செய்து அனுப்ப உத்தரவிடப்பட்டு உள்ளது.எனவே, பொது சேவை மையத்தில் முன் பதிவு செய்து, போட்டோ மற்றும் இதர ஆவணங்களைக் கொண்டு சென்றால், பொது சேவை மையங்களில் இருந்து, பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கலாம். மேலும், பாஸ்போர்ட் அலுவலகம் செல்ல, தேதி மற்றும் நேரத்தை பதிவு செய்து கொள்ளலாம். 

இதற்கு, அதிகபட்சமாக, 100 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். பொது சேவை மையங்களில் உள்ள பணியாளர்களுக்கு,பாஸ்போர்ட் விண்ணப்பங்களை பூர்த்தி செய்வது பற்றிய பயிற்சி அளிக்கப்படுகிறது.பயிற்சி முடிந்ததும், பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் வசதி, இம்மையங்களில் துவங்கப்படும்.இவ்வாறு, செந்தில் பாண்டியன் கூறியுள்ளார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement