Ad Code

Responsive Advertisement

ஆர்வமில்லை ! : அரசு பள்ளிகளில் ஆங்கில வழி சேர்க்கைக்கு... : விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை தேவை

 அரசு பள்ளிகளில் ஆங்கில வழியில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மத்திய அரசு கடந்த 2010 ஏப்ரல் 1ம் தேதி முதல் கல்வி உரிமைச் சட்டத்தை அமல்படுத்தியது. இதன் மூலம், இந்தியா கல்வியை அடிப்படை உரிமையாக நடைமுறைப்படுத்தி வரும் உலகின் 135 நாடுகளின் பட்டியிலில் இணைந்துள்ளது.
இந்த சட்டத்தை தமிழக அரசு தீவிரமாக நடைமுறைப்படுத்த, கடந்த 2009ல் மெட்ரிக் பள்ளி, ஆங்கிலோ இந்தியன் பள்ளி, ஓரியண்டல் பள்ளி, அரசு பள்ளி என அனைத்திற்கும் ஒரே மாதிரியான சமச்சீர் கல்வியை அறிமுகப்படுத்தியது. எனினும், பெற்றோர் பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் ஆங்கில வழியில் படிக்க வைக்கவே, அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
கல்வி உரிமைச் சட்டத்தின்படி ஏழை, எளிய மாணவ, மாணவிகள் அனைவரும் தங்கள் விரும்பும் தமிழ், ஆங்கில வழிகளில் கல்வியை இலவசமாக கற்க கடந்தாண்டு முதல் அரசு பள்ளிகளில் ஆங்கில வழியை அறிமுகப்படுத்தியது. அதன்படி கடலூர் மாவட்டம், விருத்தாசலம் வட்டாரத்தில் விருத்தாசலம் நகராட்சி பூதாமூர், தென்கோட்டை வீதி நகராட்சி பள்ளி, அய்யனார்கோவில் வீதி நகராட்சி பள்ளி, சத்தியவாடி பள்ளி, கோ.பவழங்குடி, எம்.பரூர், புதுப்பேட்டை நகராட்சிப் பள்ளி, எறுமனூர், கருவேப்பிலங்குறிச்சி, எடச்சத்தூர் உட்பட 11 அரசுப் பள்ளிகளில் கந்தாண்டு ஆங்கில வழி சேர்க்கை நடந்தது. இதில், சொற்ப அளவிலான மாணவர்களே சேர்ந்தனர்.
தொடர்ந்து, நடப்பாண்டு பெரும்பாலான அரசு பள்ளிகளில் ஆங்கில வழியில் பிள்ளைகளை சேர்க்க பெற்றோர்கள் ஆர்வம் காட்டவில்லை. தனியார் பள்ளிகளில் ஆங்கில வழியில் சேர்க்கவே அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இதற்கு முக்கிய காரணம் கிராமப்புறங்களில் உள்ள அரசு பள்ளி ஆசிரியர்கள் ஆங்கில வழியில் பாடங்களை சரியாக நடத்த மாட்டார்கள் என்ற எண்ணம் பெற்றோர்களிடம் வேரூன்றி உள்ளது.
எனவே, மாணவர்களை அரசு பள்ளிகளில் ஆங்கில வழியில் சேர்க்கவும், போதிய பெற்றோர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், ஆசிரியர்களுக்கு ஆங்கிலப் பயிற்சியை வழங்கவும் பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். கருவேப்பிலங்குறிச்சி அரசு துவக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் சக்திவேல் கூறுகையில், "அரசு பள்ளிகளில் கடந்தாண்டு முதல் ஆங்கில வழிப் பாடம் அறிமுகப்படுத்தப்பட்டு, அதற்கு தேவையான கல்வி உபகரணங்கள் இலவசமாக வழங்கப்படுகிறது.
ஆசிரியர்களுக்கும் ஆங்கில வழியில் கற்பிக்க பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. பெற்றோர்கள் அதிக பணத்தை செலவழித்து தனியார் பள்ளிக்கு செல்வதைவிட முறையான பயிற்சி பெற்றுள்ள ஆசிரியர்கள் பணியாற்றும் அரசுப் பள்ளிகளிகளில் தங்கள் பிள்ளைகளை சேர்க்க வேண்டும்' என்றார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement