Ad Code

Responsive Advertisement

காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் தொழிற்கல்வி ஆசிரியர்கள் வலியுறுத்தல்

தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழகத்தின் பொதுக்குழு கூட்டம்தஞ்சை அரசர் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட தலைவர் மதியழகன் தலைமையில் நடைபெற்றது. 

மாவட்ட துணை தலைவர் சிவாஜி முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் ரெங்கநாதன் வரவேற்றார். கூட்டத்தில் மாநில தலைவர் ராமச்சந்திரன் கலந்து கொண்டுபேசினார்.

கூட்டத்தில்,அரசு பள்ளிகளில் காலியாக உள்ள தொழிற்கல்வி ஆசிரியர் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். பொதுமாறுதல் கலந்தாய்வு தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கும் நடத்த வேண்டும். தரம் உயர்த்தப்படும் மேல்நிலைப்பள்ளிகளில் தொழிற்கல்வி பிரிவுதொடங்கப்பட்டு தொழிற்கல்வி பணியிடம் உருவாக்க வேண்டும். தனியார் பள்ளிகளில் பணிபுரியும் தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு தேர்வுநிலை, சிறப்புநிலை மற்றும் இதரசலுகைகள் வழங்கப்படாமல் உள்ளது. இந்த சலுகைகளை உடனே வழங்க வேண்டும்.இந்த கோரிக்கைகள் தொடர்பாக முதல்–அமைச்சர் ஜெயலலிதாவை வருகிற 7–ந்தேதி நேரில்சந்தித்து மனு கொடுக்க தஞ்சையில் இருந்து 2 வேன்களில் புறப்பட வேண்டும்.

மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement