Ad Code

Responsive Advertisement

ஓர் ஆசிரியருக்காக ஒரு ஊரே சேர்ந்து போராட்டம் - ஆசிரியரை மாற்ற எதிர்ப்பு: பள்ளியை பூட்டி மாணவர்கள் பெற்றோர் சாலை மறியல்


ஆரணி அடுத்த பையூர் எம்.ஜி.ஆர். நகரில் ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இதில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருபவர் நாராயணன்.
இந்நிலையில் இவரை சங்கீதவாடி கிராமத்தில் உள்ள பள்ளிக்கு இடமாற்றம் செய்ததாக தெரிகிறது. இதுகுறித்து தகவலறிந்த மாணவர்களின் பெற்றோர், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என 500க்கும் மேற்பட்டோர் இன்று காலை 9 மணியளவில் பள்ளிக்கு திரண்டு வந்தனர்.
அங்கு ஆசிரியர் நாராயணனை வேறு பள்ளிக்கு மாற்றக் கூடாது எனக்கூறி பள்ளியை பூட்டினர். பின்னர் ஆரணி – வாழைப்பந்தல் சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்த ஆரணி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) விநாயகமூர்த்தி, சப்–இன்ஸ்பெக்டர் ஷாபுதீன், ஊராட்சி மன்ற தலைவர் மணிமேகலை ஆகியோர் விரைந்து வந்து மாணவர்களையும், பெற்றோர்களையும் சமரசம் செய்ய முயன்றனர்.
அப்போது மாணவர்களின் பொற்றோர்கள் கூறுகையில்:–
இந்த பள்ளியில் 20 மாணவர்களே படித்து வந்தனர். இதனால் ஆசிரியராக உள்ள நாராயணன், சைக்கிளில் வீடு வீடாக சென்று மாணவர்களை சந்தித்து பள்ளியில் சேர்த்துள்ளார். அதன்படி தற்போது இங்கு 280 மாணவர்கள் படித்து வருகின்றனர்.
இது தவிர மாணவர்கள் அனைவருக்கும் ஒழுக்கம், பணிவு, நன்னடத்தை ஆகியவற்றை கற்றுக் கொடுத்துள்ளார். இதனால் இவரை மாற்ற அனுமதிக்க மாட்டோம் எனக்கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து போலீசார், சம்பந்தப்பட்ட கல்வி அதிகாரிகளிடம் கூறி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.
இதனை ஏற்ற பொதுமக்கள் சாலை மறியலை மட்டும் கைவிட்டனர்.
ஆனால் இப்பிரச்சனைக்கு உரிய தீர்வு கிடைக்கும் வரை போராட்டத்தை கைவிடமாட்டோம் எனக்கூறி பள்ளி முன்பு போராட்டம் நடத்தினர்.
தகவலறிந்து தாசில்தார் துரை மணிமேகலை, உதவி தொடக்க கல்வி அலுவலர் புருஷோத்தமன், டி.எஸ்.பி.மணி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.
இதனையடுத்து பள்ளி திறக்கப்பட்டு ஆசிரியர்கள், மாணவர்கள் பள்ளிக்கு சென்றனர்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Post a Comment

1 Comments

  1. ஆசிரியர் நாராயணன் த.நா.ஆ.ப.ஆசிரியர் கூட்டணியின் வட்டாரக் கிளை பொருளாளர் என்பது கூடுதல் தகவல்.

    ReplyDelete

அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..

நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை

Ad Code

Responsive Advertisement