Ad Code

Responsive Advertisement

கோவிலில் செயல்படும் அரசு தொடக்கப்பள்ளி

ஜருகு அருகே உள்ள கடத்திகுட்டை கிராமத்தில் பள்ளி கட்டிடம் இடிக்கப்பட்ட தால் கோவிலில் அரசு தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் தெரிவித்தனர்.

பள்ளி கட்டிடம் இடிப்பு

தர்மபுரி மாவட்டம் ஜருகு அருகே உள்ள கடத்திகுட்டை கிராமத்தில் காப் புறுதி மையம் சார்பில் 2006-ம் ஆண்டு அரசு தொடக்கப்பள்ளி கட்டப்பட்டது. இங்கு கடத்திகுட்டை, பொம்மபட்டி உள்ளிட்ட கிராமத்தை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கல்வி பயின்று வந்தனர். இந்தநிலையில் கடந்த 2-ந் தேதி பள்ளி திறக்கப்படுவதாக இருந்தது. ஆனால் பள்ளிக்கட்டிடம் தங்களுடைய நிலத்தில் இருப்பதாக கூறி அப்பகுதியை சேர்ந்த சிலர் கட்டிடத்தை இடித்தனர். மேலும் பள்ளி விளம்பர பலகையையும் சேதப்படுத் தினர். இதனால் மாணவ-மாணவிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

இதுதொடர்பாக பள்ளி தலைமை ஆசிரியர் கிருஷ்ணன் கட்டிடத்தை இடித்தவர்களிடம் கேட்டபோது பள்ளி கட்டிடம் தங்களது நிலத்தில் உள்ளது என்று கூறி தகராறு செய்ததாக கூறப்படு கிறது. இதைத் தொடர்ந்து கடத்திகுட்டை கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் தர்மபுரியில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டர் விவேகானந்தனிடம் மனு கொடுத்தனர்.

மாணவ-மாணவிகள் தவிப்பு

இதையடுத்து கல்வித்துறை அதிகாரி கள் நேரில் சென்று சம்பவ இடத்தை பார்வையிட்டனர். இதுகுறித்து ஆய்வு செய்து முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரிக்கு தகவல் கொடுத்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாணவ-மாணவிகள், ஊர் பொதுமக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அதில் பள்ளி கட்டிடத்தை இடித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மீண்டும் புதிய கட்டிடம் கட்டி தர வேண்டும் என்று கூறி மனு கொடுத்தனர். தற்போது பள்ளி கட்டிடம் இடிக்கப்பட்டதால் மாணவ- மாணவிகள் அங்குள்ள கோவிலில் அமர்ந்து பாடம் கற்று வருகின்றனர். மேலும் அவர்கள் மற்ற பள்ளிகளில் உள்ளதுபோல் அடிப்படை வசதிகள் இல்லாமல் தவிக்கின்றனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகை யில், பள்ளி கட்டிடம் இடிக்கப்பட்டதில் இருந்து கோவிலில் குழந்தைகளுக்கு பாடம் நடத்தி வருகின்றனர். இந்த பள்ளி தனியாருக்கு சொந்தமான நிலத் தில் உள்ளது என கூறி பள்ளி கட்டிடத்தை சிலர் இடித்து விட்டனர். இந்த பள்ளிக்கு போதிய அடிப்படை வசதிகள் இல்லா மல் குழந்தைகள் அவதிப்படு கின்றனர். புதிய பள்ளி கட்டிடம் கட்டி தராவிட்டால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம். எனவே மாவட்ட நிர்வாகம் கடத்திகுட்டை அரசு தொடக்க பள்ளிக்கு புதிய பள்ளி கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement