மதுரை மதுரையில் 'கவுன்சிலிங்'கை புறக்கணித்த 49 ஆசிரியர்
பயிற்றுனர்களை, தொலைதுார மாவட்டங்களுக்கு பணிமாற்றம் செய்து நேற்று உத்தரவு
பிறப்பிக்கப்பட்டது. இன்றே (ஜூன் 18) பணியில் சேர அவகாசம்
கொடுக்கப்பட்டுஉள்ளது.
முதன்மை கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதயசாமி கூறுகையில், ''கல்வித்துறை உயர்
அதிகாரிகள் வழிகாட்டுதலின்படி தான் 49 பேருக்கும் மாறுதல் 'ஆர்டர்'கள்
கொடுக்கப்பட்டன. முதல் நாள் 'கவுன்சிலிங்'கில் பங்கேற்றவர்கள், அருகே உள்ள
மாவட்டங்களின் காலி இடங்களை தேர்வு செய்துவிட்டனர். மற்றவர்களும் பக்கத்து
மாவட்டங்களுக்கு தான் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்,'' என்றார்.
6 இடங்களுக்கு 9 பேரா?
'கவுன்சிலிங்'கை புறக்கணித்த ஆசிரியர் பயிற்றுனர்களை தொலைதுார
மாவட்டங்களுக்கு மாறுதல் செய்துள்ளதாக சர்ச்சை எழுந்த நிலையில், நீலகிரி
மாவட்டத்தில் மொத்தமே 6 காலிப் பணியிடங்கள் தான் 'கவுன்சிலிங்'கில்
காண்பிக்கப்பட்டன. ஆனால், 49 பேரில் 9 பேரை நீலகிரி மாவட்டத்திற்கு பணி
மாற்றம் செய்துள்ளனர், என ஆசிரியர் பயிற்றுனர்கள் தெரிவித்தனர்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை