Ad Code

Responsive Advertisement

குரூப் 2 தேர்வு வினாத்தாளில்குளறுபடி; தேர்வர்கள் புகார்

குரூப் 2 தேர்வில், வினாத்தாளில் குளறுபடிகள் இருந்ததாக, தேர்வர்கள் குழப்பம் அடைந்தனர்.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில், நேற்று நடந்த குரூப் 2 தேர்வில், ஆறு லட்சத்து 32 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருந்தனர்.கோவை மாவட்டம் அன்னுார் தாலுகா, எஸ்.எஸ்.குளம் அரசு மேல்நிலைப்பள்ளி மையத்தில், 300 பேர் அனுமதி பெற்றிருந்தனர். இதில் 157 பேர் (52 சதவீதம்) நேற்று தேர்வு எழுத வரவில்லை. 143 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். தேர்வர்கள் கூறுகையில், 200 கேள்விகளில் தமிழ் இலக்கணம், பாடல், கவிதை, அறிஞர்கள் குறித்து 100 கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. அவற்றில் சில கேள்விகள் கடினமாக இருந்தன. எழுத்துப்பிழைகளும், வாக்கியப்பிழைகளும் இருந்தன.

ஏழைகளுக்கு தொண்டு செய்வது,கடவுளை வணங்குவதற்கு சமம் என்று கூறியவர் யார்? என்ற கேள்விக்கு இரண்டு பதில்கள் சரியானவையாக உள்ளன என்றனர். வினாத் தாளில் கிராமப்புறம் என்னும் வார்த்தை, தவறுதலாக கிராமப்புரம் என்று உள்ளது. தமிழ்நாட்டில் தனிநபர் வருமானத்தில் முதலிடம் பெற்ற மாவட்டம் எது? என்பதற்கு பதிலாக, தனிநபர் வருமானத்தில் முதலிடத்தில் பெற்ற மாவட்டம் எது? என்று அச்சாகியுள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement