Ad Code

Responsive Advertisement

மருத்துவ மாணவர் சேர்க்கை ஜூன் 12ல் தரவரிசை பட்டியல்?

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் கடந்த 9ம் தேதி வெளியானது. 2014-15ம் கல்வியாண்டில் எம்.பி.பி.எஸ். மற்றும் பிடிஎஸ் படிப்பில் சேருவதற்கான விண்ணப்பங்கள் விநியோகம் கடந்த 14ம் தேதி தொடங்கியது. தமிழகத்தில் உள்ள 19 அரசு மருத்துவ கல்லூரிகளிலும் விண்ணப்பங்கள் வழங்கப் பட்டு வருகின்றன.
நேற்று முன்தினம் வரை 27,966 மாணவர்கள் விண்ணப்பங்கள் பெற்றுள்ளனர். விண்ணப்பங்களை பெற வரும் 30ம் தேதி கடைசி நாளாகும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மருத்துவ கல்வி தேர்வுக்குழுவுக்கு ஜூன் மாதம் 2ம் தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும். இதுவரை பூர்த்தி செய்யப்பட்ட 2500க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் தேர்வுக்குழுவுக்கு வந்து சேர்ந்துள்ளது. எம்.பி. பி.எஸ். மற்றும் பி.டி.எஸ் படிப்பில் சேர விண்ணப்பித்துள்ள மாணவர்களில் பலர், பிளஸ் 2 தேர்வில் பெற்ற மதிப்பெண்களை மறுமதிப்பீடு செய்ய விண்ணப்பித்துள்ளனர்.

இந்த மறுமதிப்பீட்டிற்கு பிறகு மாணவர்கள் பெறும் புதிய மதிப்பெண்களை ஜூன் 10ம் தேதிக்குள் அளிப்பதாக பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் மருத்துவ கல்வி தேர்வுக்குழுவிடம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதன்படி மாணவர்களின் மறுமதிப்பீட்டு மதிப்பெண்கள் 10ம் தேதிக்குள் கிடைத்து விட்டால் 12ம் தேதி எம்.பி.பி.எஸ். மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலை அதிகார பூர்வமாக வெளியிட மருத்துவ கல்வி தேர்வுக்குழு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்பிறகு கலந்தாய்வு தேதி அறிவிக்கப்பட்டு மருத்துவ படிப்பு களுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கும் என தெரிகிறது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement