Ad Code

Responsive Advertisement

ரேண்டம் எண் ஜூன் 11ல் வெளியீடு பொறியியல் படிப்புக்கு ஜூன் 27ல் கவுன்சலிங் - அண்ணா பல்கலை அறிவிப்பு


கவுன்சலிங் விவரம்:

ரேண்டம் எண் வெளியீடு    ஜூன் 11
ரேங்க் பட்டியல்        ஜூன் 16
விளையாட்டு வீரர்களுக்கு    ஜூன் 23, 24
மாற்று திறனாளிகளுக்கு    ஜூன் 25
பொதுப் பிரிவினருக்கு    ஜூன் 27 முதல் ஜூலை 28 வரை




சென்னை: பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான பொது கவுன்சலிங் ஜூன் 27ம் தேதி தொடங்கும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. வருகிற 11ம் தேதி ரேண்டம் எண்ணும், 16ம் தேதி ரேங்க் பட்டியலும் வெளியிடப்படுகிறது. ஜூலை 28ம் தேதி வரை ஒரு மாதத்துக்கு கவுன்சலிங் நடக்கிறது. தமிழகத்தில் பி.இ, பி.டெக் உள்ளிட்ட பொறியியல் படிப்புகளுக்காக அண்ணா பல்கலை மற்றும் அரசு, அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், சுயநிதி கல்லூரிகள் உட்பட 570 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் 2 லட்சத்து 5 ஆயிரத்து 463 இடங்கள் உள்ளன.


மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் அண்ணா பல்கலைக்கழகம் உள்பட தமிழகம் முழுவதும் 60 மையங்களில் கடந்த மே 3ம் தேதி முதல் வினியோகிக்கப்பட்டது. இதற்காக, 2 லட்சத்து 50 ஆயிரம் விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட்டது. முதலில் மே 20ம் தேதி விண்ணப்பங்கள் வினியோகிப்பது கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், மாணவர்கள் வேண்டுகோளின்படி மேலும் ஒரு வாரம் அவகாசம் அளிக்கப்பட்டது. அதாவது, மே 27ம் தேதி வரை விண்ணப்ப வினியோகம் நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்தது.

மொத்தம் பொறியியல் படிப் பில் சேர 2 லட்சத்து 12 ஆயிரம் விண்ணப்பங்கள் வினியோகிக்கப்பட்டன. இதில், 1 லட்சத்து 72 ஆயிரத்து 500 பேர் மட்டுமே விண்ணப்பங்களை பூர்த்தி செய்து வழங்கினர். கடந்த ஆண்டில் 2 லட்சத்து 35,211 விண்ணப்பங்கள் வினியோகிக்கப்பட்டன. இதில், விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பித்தவர்கள் ஒரு லட்சத்து 90,850 பேர். இவர்களில் ஒரு லட்சத்து 84,930 பேரின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக் கது. இது, கடந்த ஆண்டை விட 20 ஆயிரத்து 350 விண்ணப்பங்கள் குறைவு.

இந்நிலையில், வருகிற ஜூன் 23ம் தேதி முதல் கவுன்சலிங் தொடங்கும் என்று அண்ணா பல்கலை அறிவித்துள்ளது. இது தொடர்பாக அண்ணா பல்கலை நேற்று வெளியிட்ட அறிவிப்பில், பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான ரேண்டம் எண் வருகிற ஜூன் 11ம் தேதியும், ரேங்க் பட்டியல் 16ம் தேதியும் வெளியிடப்படும். விளை யாட்டு வீரர்களுக்கான சான்றிதழ் சரிபார்த் தல் வருகிற 13ம் தேதி முதல் 16ம் தேதி வரை நடைபெறும். விளை யாட்டு வீரர்களுக்கான ரேங்க் பட்டியல் 17ம் தேதி வெளியிடப்படும்.

இதையடுத்து விளை யாட்டு வீரர்களுக்கான கவுன்சலிங் 23, 24 ஆகிய தேதிகளில் நடைபெறும். 25ம் தேதி மாற்று திறனாளிகளுக்கான கவுன்சலிங், பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கவுன்சலிங் ஜூன் 27ல் தொடங்கி ஜூலை 28ம் தேதி வரை ஒரு மாதம் நடக்கிறது. தொழிற்பிரிவு மாணவர்களுக்கான கவுன்சிலிங் ஜூலை 9ம் தேதி முதல் ஜூலை20ம் தேதி வரை நடக்கிறது. இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான கவுன்சிலிங் முடிந்ததும் ஆகஸ்ட் முதல் வாரத்தில் வகுப்புகள் தொடங்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement