Ad Code

Responsive Advertisement

TNTET-பதிவு மூப்பிற்கும் மார்க் பதிவு செய்ய வேண்டும் - தினமலர்

 டி.இ.டி., தேர்வை எதிர்த்து, கோர்ட்டில், மேல் முறையீடு சம்பந்தமாக, தேர்வர்கள் வழக்கு தொடர்வது, கின்னஸ் சாதனையின் உச்சிக்கே சென்று விட்டது.டி.ஆர்.பி., அலுவலகத்தில், பஞ்சாயத்து தீர்ப்பதற்கு என்றே, ஒரு
பிரிவை திறந்து, இது தொடர்பாக வரும் தேர்வர்களுக்கு, பதில் சொல்வதற்கென்றே, 100 பேரையாவது நியமிக்க வேண்டும் என்ற நிலை உள்ளது.

தமிழகத்தில் மட்டும் தான், இத்தேர்வு முறை வகுக்கப்படுகிறது. வேலைவாய்ப்பு அலுவலகத்தில், 20, 15 ஆண்டுகள் என, பதிந்து, ஓய்வில்லாமல் அலைந்து சென்றவர்களுக்கு, குறைந்தபட்ச, 'போனஸ் மார்க்' போட, தமிழக முதல்வர், கண்டிப்பாக கருணை காட்ட வேண்டும். அண்டை மாநிலங்களில் எல்லாம், பதிவு மூப்பிற்கு, மார்க் போடுகின்றனர்.டி.இ.டி., தேர்வுமுறை வழிவகுத்த குழுவில், ஆசிரியர்களை, அதாவது அனுபவமிக்கவர்களை சேர்த்து, அவர்களின் மேலான ஆலோசனைகளையும் ஏற்று, தேர்வில், பதிவு மூப்பிற்கும் மார்க் பதிவு செய்ய வேண்டும்.

Ad Code

Responsive Advertisement