Ad Code

Responsive Advertisement

SPECIAL TET:மே 21ல் சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு.

பார்வையற்றோர் மற்றும் ஊனமுற்றோர்களுக்கும் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தி தேர்வு செய்யும் பொருட்டு, அனைத்து மாவட்டங்களிலும் மே 21ம் தேதி சிறப்பு ஆசிரியர் தேர்வு நடத்துமாறு தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி,அனைத்து மாவட்டங்களிலும் பார்வையற்றோருக்கு அரசு நிதியுதவியுடன் ஏப்ரல், மே மாதங்களில் 40 நாட்களுக்கு சிறப்புப் பயிற்சியும் அளிக்கப்பட்டது.

பார்வையற்றோர் மற்றும் ஊனமுற்றோருக்கான சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வு மே 21ம் தேதி ஈரோடு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் காலை பத்து மணிக்கு நடக்கிறது. மொழிப்பாடம், கணிதம், அறிவியல், வேதியியல் உள்ளிட்ட பாடங்களில், ஈரோடு மாவட்டத்தில் மட்டும் ஆண், பெண் உள்பட மொத்தம் 85 பேர் தேர்வு எழுதுகின்றனர்.

Ad Code

Responsive Advertisement