Ad Code

Responsive Advertisement

வாணியம்பாடியில் பள்ளி வாகனங்கள் ஆய்வு




வாணியம்பாடி வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் வாணியம்பாடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இயங்கி வரும் பள்ளி வாகனங்களின் தர ஆய்வு செய்யப்பட்டது. மோட்டார் வாகன ஆய்வாளர் ரங்கநாதன் தலைமையில் 96 பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன.

ஆய்வின்போது வாகனங்களில் வேக கட்டுப்பாட்டு கருவி, தீயணைப்பு கருவி, முதலுதவி பெட்டி, அவசர நேர வெளியேறும் வழிகள், வாகன சான்றிதழ் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தனர். இதில் முறையாக விதிகள் பின்பற்றப்படாத 7 வாகனங்களின் தகுதி சான்றிதழ் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement