Ad Code

Responsive Advertisement

பி.எஸ்.என்.எல்., கட்டணம் உயர்வு: முன் தேதியிட்டு அமலாகிறது

 பி.எஸ்.என்.எல்., தொலைபேசி கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. மே, 1ம் தேதி முதல், முன் தேதியிட்டு, இக்கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளதாக, அந்நிறுவனம் அறிவித்துள்ளது.


இதுகுறித்த, பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தின் மக்கள் தொடர்பு பிரிவு துணை பொது மேலாளர், மோகன் வெளியிட்டுள்ள அறிக்கை: பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தின், பொதுத் தொலைபேசிகள் (பி.சி.ஓ.,), மற்றும் சொந்த தொலைபேசிகளில், ஒரு அழைப்புக்கான காலம், 60 வினாடிகளிலிருந்து, 45 வினாடிகளாகக் குறைக்கப்படுகிறது. ஒரு அழைப்புக்கான இந்த கால குறைப்பு, பி.எஸ்.என்.எல்., போனில் இருந்து, பி.எஸ்.என்.எல்., போனுக்கு செய்யப்படும் அழைப்புக்கு மட்டும் பொருந்தும். பிற, 'நெட்வொர்க்' போன்களுக்கு செய்யப்படும், ஒரு அழைப்புக்கான காலம், 45 வினாடிகள் என, ஏற்கனவே நிர்ணயித்திருப்பது தொடரும். பி.எஸ்.என்.எல்., நிறுவனம், 'பிராட்பேண்ட்' சேவையில், பி.பி.ஜி., கோம்போ 2799; பி.பி.ஜி., கோம்போ 1445; பி.பி.ஜி., கோம்போ 1275 ஆகிய எல்லையில்லா திட்டங்களை அறிவித்துள்ளது. மாத கட்டணம் முதல், ஆண்டு கட்டணம் வரை என, திட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு, அறிக்கையில் கூறியுள்ளார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement