தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் உள்ள இடங்களில் மாணவர்களைச் சேர்ப்பதற்கு அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் கவுன்சலிங்கிற்கு மே 3-ஆம் தேதியிலிருந்து விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன.
தமிழ்நாட்டில் அரசு பொறியியல் கல்லூரிகள், அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், சுயநிதிப் பொறியியல் கல்லூரிகளையும் சேர்த்து மொத்தம் சுமார் 600 பொறியியல் கல்லூரிகள் உள்ளன.
தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக்கழகத் துறைகள் மற்றும் பல்கலைக்கழகக் கல்லூரிகளில் பிஇ, பிடெக் படிப்புகளில் உள்ள இடங்கள், பல்கலைக்கழகத் துறைகள் மற்றும் பல்கலைக்கழகக் கல்லூரிகளில் மெக்கானிக்கல் மற்றும் சிவில் (தமிழ் மீடியம்) பட்டப் படிப்புகளில் உள்ள இடங்கள், அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகளில் உள்ள இடங்கள், சுயநிதிப் பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் உள்ள இடங்களில் கவுன்சலிங் மூலம் மாணவர்கள் சேர்க்கப்படுகிறார்கள். சென்னை அண்ணா பல்கலைக்கழகம் இந்தக் கவுன்சலிங்கை நடத்துகிறது.
பிளஸ் டூ வகுப்பில் கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய பாடப்பிரிவுகளை எடுத்துப் படித்து தேர்ச்சி பெற்ற மாணவர்கள் கவுன்சலிங் மூலம் பொறியியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்கலாம். அண்ணா பல்கலைக்கழகத்தில் கவுன்சலிங் மூலம் பொறியியல், தொழில்நுட்ப படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்களின் தகுதி குறித்த விவரங்கள் விளக்கக் குறிப்பேட்டில் விரிவாகத் தெரிவிக்கப்பட்டுள்ளன.
டைரக்டர் ஜெனரல் ஆஃப் ஷிப்பிங் விதிமுறைகளின்படி, மெரைன் இன்ஜினியரிங் பட்டப் படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் பிளஸ் டூ தேர்வில் இயற்பியல், வேதியியல், கணிதம் ஆகிய பாடப்பிரிவுகளில் சராசரியாக குறைந்தது 60 சதவீத மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும். ஆங்கிலத்தில் குறைந்தது 50 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். அத்துடன் அதிகபட்ச வயது வரம்பு 25. குறைந்தபட்ச உயரம் 157 செமீ இருக்க வேண்டும். குறைந்தபட்ச எடை 48 கிலோ இருக்க வேண்டும். கண்பார்வை சரியாக இருக்க வேண்டும். இந்தப் பாடப்பிரிவை தேர்வு செய்வதற்கு முன்னதாக, மாணவர்கள் தாங்கள் மருத்துவரீதியாக சரியாக இருக்கிறோமா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். மைனிங் என்ஜினியரிங் பாடப்பிரிவில் ஆண்கள் மட்டுமே சேர அனுமதிக்கப்படுவார்கள். மாணவிகள் சேர முடியாது.
ஜெனரல் மெஷினிஸ்ட், எலெக்ட்ரிக்கல் மெஷின்ஸ் அண்ட் அப்ளையன்சஸ், எலெக்ட்ரானிக் எக்யூப்மெண்ட்ஸ், டிராப்ட்ஸ்மேன் சிவில், ஆட்டோ மெக்கானிக், டெக்ஸ்டைல் டெக்னாலஜி ஆகிய தொழில் பாடப்பிரிவுகளை பிளஸ் டூ வகுப்பில் எடுத்துப் படித்து, நிர்ணயிக்கப்பட்டுள்ள அளவுக்கு குறைந்தபட்ச மதிப்பெண்களைப் பெற்றுள்ள மாணவர்கள் பிஇ, பிடெக் படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம். தொழில் பயிற்சி (வொகேஷனல்) மாணவர்களுக்குத் தனியே கவுன்சலிங் நடத்தப்படுகிறது.
அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் கவுன்சலிங் மூலம் பொறியியல் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்களுக்கான விண்ணப்பக் கட்டணம் ரூ.500. தமிழ்நாட்டைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட, பழங்குடி இனத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.250. தாழ்த்தப்பட்ட, பழங்குடி இனத்தைச் சேர்ந்த மாணவர்கள், ஜாதிச் சான்றிதழின் ஜெராக்ஸ் பிரதியை விண்ணப்பப் படிவம் கொடுக்கும் இடத்தில் அளித்து பெற்றுக் கொள்ளலாம். ஆன்லைன் மூலமும் விண்ணப்பிக்கலாம். நேரிலோ அல்லது தபால் மூலமோ விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை மே 20-ஆம் தேதிக்குள் கிடைக்கும்படி விண்ணப்பிக்க வேண்டும்.
விளையாட்டு வீரர்களுக்கான ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பிக்க விரும்பும் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள், அதற்கான படிவம் மற்றும் விளையாட்டில் பெற்றுள்ள சாதனைச் சான்றிதழ்களின் நகல்கள், தமிழ்நாட்டிற்காக விளையாடியவர்கள் அதற்குரிய சான்றிதழ் நகல்களுடன் உரிய தொகையுடன் டிமாண்ட் டிராப்ட்டையும் இணைத்து தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை அலுவலகத்தில் நேரடியாகச் சமர்ப்பிக்க வேண்டும். விளையாட்டு வீரர்களுக்கான ஒதுக்கீட்டின் கீழ் அண்ணா பல்கலைக்கழகத் துறைகளில் 12 இடங்கள் உள்பட மொத்தம் 500 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. விளையாட்டு வீரர்களுக்கான ஒதுக்கீட்டின் கீழ் உள்ள இடங்களுக்குத் தனிக் கவுன்சலிங் நடைபெறும். சிறப்பு ஒதுக்கீட்டுக்கான மற்ற பிரிவுகளின் கீழ் உள்ள இடங்களுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களும் அதற்குரிய சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டியதிருக்கும்.
நேட்டிவிட்டி சர்டிபிகேட்:
தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் 8, 9, 10, 11, 12 ஆகிய வகுப்புகளை தமிழ்நாட்டில் படித்திருந்தால் அந்த மாணவர்கள் தமிழ்நாட்டு மாணவர்களாகக் கருதப்படுவார்கள். அவர்களுக்கு இருப்பிடச் சான்றிதழ் (நேட்டிவிட்டி சர்டிபிகேட்) தேவையில்லை. மாணவரின் பெற்றோர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும் 8, 9, 10, 11, 12 ஆகிய வகுப்புகளில் ஏதாவது ஒரு வகுப்பையோ அல்லது அனைத்து வகுப்புகளையுமோ வெளி மாநிலத்தில் படித்திருந்தால், இருப்பிடச் சான்றிதழை தமிழ்நாட்டில் உள்ள வட்டாட்சியரிடம் பெற்று அதன் நகலை விண்ணப்பத்துடன் அனுப்ப வேண்டும். இல்லாவிட்டால் அந்த மாணவர்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்படும். மத்திய அரசு ஊழியர்கள் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் கடந்த ஐந்து ஆண்டுகளாக தமிழ்நாட்டில் தொடர்ந்து பணிபுரிந்து வந்தால், அவர்களது குழந்தைகளும் விண்ணப்பிக்கலாம். இதேபோல, எந்தப் பகுதியைச் சேர்ந்தவராக இருந்தாலும் ஐந்து ஆண்டுகளாகத் தொடர்ந்து தமிழகத்தில் பணிபுரியும் பொதுத் துறை ஊழியர்களின் குழந்தைகளும் விண்ணப்பிக்கலாம். வேலை பார்க்கும் நிறுவனத்தில் சான்றிதழ் பெற்று அதனை விண்ணப்பத்துடன் அனுப்பி வைக்க வேண்டும்.
தமிழ்நாடு பிரிவைச் சேர்ந்த அகில இந்திய சர்வீஸ் அதிகாரிகளின் குழந்தைகளும் விண்ணப்பிக்கலாம்.
பிற மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் தமிழ்நாட்டில் 8-ஆம் வகுப்பிலிருந்து 12-ஆம் வகுப்பு வரை படித்திருந்தால், அந்த மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். அவர்களுக்குப் இருப்பிடச் சான்றிதழ் தேவையில்லை. தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள், பிற மாநிலங்களில் எட்டாம் வகுப்பிலிருந்து பிளஸ் டூ வரை படித்திருந்தாலும் அந்த மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். அவர்கள் இருப்பிடச் சான்றிதழ் பெற்று, விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிப்பது எப்படி?:
கவுன்சலிங் மூலம் பொறியியல் கல்லூரிகளில் சேர விரும்பும் மாணவர்களுக்கு மே 3-ஆம் தேதி முதல் விண்ணப்பங்கள் வழங்கப்படுகிறது. சென்னை அண்ணா பல்கலைக்கழகத் தேர்வு மையம் உள்பட மாநிலத்தில் பல்வேறு ஊர்களில் 50-க்கும் மேற்பட்ட மையங்களில் விண்ணப்பத்தைப் பெறலாம்.
இலங்கைத் தமிழ் அகதி மாணவர்கள்:
இலங்கைத் தமிழ் அகதிகள் தலைமை நிலைய தாசில்தாரிடம் அடையாளச் சான்றிதழ் பெற வேண்டும். அகதிகள் முகாமில் பதிவு செய்யவில்லை என்றால் பாஸ்போர்ட், விசா, போலீஸ் நிலையத்தில் பதிவு செய்ததற்கான சான்றிதழ் ஆகியவற்றின் நகல்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். தமிழ்நாட்டில் 8-ஆம் வகுப்பிலிருந்து 12-ஆம் வகுப்பு வரை படித்துள்ள விவரம் குறித்தும் குறிப்பிட வேண்டும்.
கோடிங் ஷீட்டில் உள்ள விண்ணப்ப எண்ணை விண்ணப்பப் படிவத்தில் உள்ள பதிவு எண் இடத்தில் தெளிவாக எழுதவும். பெயர், முகவரி, தொலைபேசி எண், இ-மெயில் முகவரி ஆகியவற்றைக் கவனத்துடன் எழுதவும். மாணவர்கள் தங்களது புகைப்படத்தை ஒட்டி, அதில் உரிய அதிகாரியிடமிருந்து சான்றொப்பம் பெற வேண்டும். தங்களுடைய பத்தாம் வகுப்பு டிரான்ஸ்பர் சர்டிபிகேட்டில் (டி.சி) கொடுக்கப்பட்டுள்ளபடி, பிறந்த தேதியை எழுதவும். விண்ணப்பத்துடன் பூர்த்தி செய்த கோடிங் ஷீட்டையும் மறக்காமல் அனுப்ப வேண்டும்.
10-ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், 12-ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், டிரான்ஸ்பர் சர்ட்டிபிகேட், பிளஸ் டூ ஹால் டிக்கெட் ஆகியவற்றின் நகல்களை இணைத்து அனுப்ப வேண்டும். சிறப்பு ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பிக்கும் மாணவர்கள் அதற்குரிய சான்றிதழ்களின் நகல்கள், டிமாண்ட் டிராப்ட் ஆகியவற்றையும் இணைத்து அனுப்ப வேண்டும். நேட்டிவிட்டி சான்றிதழ் நகல், முதல் தலைமுறை பட்டதாரி குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதற்கான நகல், அதற்கான உறுதி மொழிச் சான்றிதழ், இலங்கைத் தமிழ் அகதிகள் என்பதற்கான சான்றிதழ் ஆகியற்றையும் உரிய விண்ணப்பதாரர்கள் இணைத்து அனுப்ப வேண்டும். விண்ணப்பிப்பது குறித்த விரிவான தகவல்கள் இணையதளத்திலும், தகவல்கள் மற்றும் வழிமுறைகள் கையேட்டிலும் இடம் பெற்றுள்ளன. கவுன்சலிங்கின் போது மூலச் சான்றிதழ்கள் சரிபார்க்கப்படும் என்பதால், மூலச் சான்றிதழ்களைப் பத்திரமாக வைத்திருக்கவும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை இந்த மாதம் 20-ஆம் தேதிக்குள் கிடைக்கும்படி விண்ணப்பிக்க வேண்டும்.
விவரங்களுக்கு: www.annauniv.edu
மே 11-ம் தேதி முதல் எம்பிபிஎஸ், பிடிஎஸ் விண்ணப்பம்
தமிழ்நாட்டில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் சேர விரும்பும் மாணவர்களுக்கான விண்ணப்பங்கள் மே 11-ஆம் தேதி முதல் வழங்கப்படும். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.
தமிழ்நாட்டில் உள்ள 19 அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் படிப்பில் 2,555 இடங்களும் பிடிஎஸ் படிப்பில் 100 இடங்களும் உள்ளன. இதில், 15 சதவீத இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டின்கீழ் நிரப்பப்படும். இதுதவிர 12 சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின்கீழ் 914 இடங்கள் உள்ளன. 18 சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் 900-க்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன.

Social Plugin