Ad Code

Responsive Advertisement

அரசு பள்ளியில் பூட்டிய அறைக்குள் தீ: கம்ப்யூட்டர்கள் எரிந்து நாசம்...

வாணியம்பாடி நியூ டவுன் பகுதியில் நகராட்சி அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் உள்ள ஒரு அறையில் மாதாந்திர தேர்வு விடைத்தாள்கள் வைக்கப்பட்டிருந்தது. மேலும் பள்ளிக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் அந்த அறை பூட்டப்பட்டிருந்தது.
இந்நிலையில் நேற்று மாலை 5 மணியளவில் பள்ளி அறையில் இருந்து புகை வந்ததை கண்ட பொதுமக்கள் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதற்குள் தீ மளமளவென பரவியது.
விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் வகுப்பறை பூட்டை உடைத்து உள்ளே சென்று தீயை அணைத்தனர். எனினும் 16 மின்விசிறி மற்றும் மின்விளக்குகள், டி.வி., கம்ப்யூட்டர், விடைத்தாள்கள் உள்ளிட்டவை எரிந்து சேதமானது.
இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியர் வாணியம்பாடி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ஜோகிந்தர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

Ad Code

Responsive Advertisement