Ad Code

Responsive Advertisement

சிறுமியருக்கான போட்டித்தேர்வு விளையாட்டு ஆணையம் அழைப்பு

ஈரோடு மாவட்ட தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் சிறுமியர்களுக்கான போட்டித்தேர்வு நடக்கிறது.

தமிழக அரசு விளையாட்டினை மேம்படுத்தவும், இளம் வயதிலேயே வீராங்கனைகளை தேர்வு செய்து அவர்களுக்கு தங்கும் இடம், உணவு, விளையாட்டு உபகரணங்கள் மற்றும் சிறந்த பயிற்றுனர்கள் மூலம் பயிற்சி அளிக்க திட்டமிட்டுள்ளது.

இதற்காக, அருகாமையில் உள்ள பள்ளிகளில் தங்கள் கல்வியை தொடர்ந்து அதன்மூலம் போட்டிகளில் கலந்து கொள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் முயல்கிறது.

இதில், பத்து முதல், 14 வயது வரையிலான சிறுமியர்களுக்கு மே 23ல் ஈரோடு வ.உ.சி. பூங்கா விளையாட்டு அரங்கில் ஜிம்னாஸ்டிக்ஸ், மேஜைப்பந்து, நீச்சல் போட்டிக்கு தேர்வு நடக்கிறது.

இந்த விளையாட்டில் சிறந்து விளங்கும் மற்றும் ஆர்வம் கொண்டுள்ள மாணவியர் கலந்து கொள்ளலாம். மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவில் வெற்றி பெற்ற மாணவியர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
இதற்கான விண்ணப்பம், ஈரோடு மாணவியர் விளையாட்டு விடுதியில் பத்து ரூபாய் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம். மே 22ம் தேதி மாலை ஆறு மணிக்குள் விண்ணப்பத்தை பெற வேண்டும்.

ஈரோடு பெண்கள் விளையாட்டு விடுதி மேலாளர் கீதாஞ்சலி ரத்தனமாலா இத்தகவலை தெரிவித்துள்ளார்.

Ad Code

Responsive Advertisement