Ad Code

Responsive Advertisement

குறைந்த தேர்ச்சி விகிதத்திற்கு காரணமான தலைமையாசிரியர்கள் இடமாற்றம் - கல்வித்துறை முடிவு

பிளஸ் 2, பத்தாம் வகுப்பில் தேர்ச்சி விகிதம் குறைந்த பள்ளி தலைமை ஆசிரியர்களை, இடமாற்றம் செய்ய கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
சமீபத்தில் வெளியான பிளஸ் 2, பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளில், தனியார் பள்ளிகளை விட, அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் குறைந்துள்ளது. சில அரசு பள்ளிகள் 42 சதவீதம் மட்டுமே பெற்றுள்ளன.
இதையடுத்து நாகர்கோவில் கல்வி மாவட்டத்தில் சில தலைமை ஆசிரியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதற்கு ஆசிரியர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியதால் சஸ்பெண்ட் நடவடிக்கையை கல்வித்துறை நிறுத்தியது. இந்நிலையில் தேர்ச்சி விகிதம் குறைந்த பள்ளியின் தலைமை ஆசிரியர்களை இடமாற்றம் செய்ய கல்வித்துறை முடிவுசெய்துள்ளது.
இதையடுத்து 60 சதவீதத்திற்கு கீழ் தேர்ச்சி விகிதம் பெற்ற பள்ளிகளின் பட்டியலை கல்வித்துறை அதிகாரிகள் தயாரித்து வருகின்றனர்.
ஆசிரியர்கள் இடமாறுதல், பதவி உயர்வுக்கான கவுன்சிலிங் துவங்குவதற்கு முன் இடமாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் தேர்ச்சி விகிதம் குறைந்த பள்ளிகளின் ஆசிரியர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement