பள்ளிகளில் மாணவர்கள் எந்த மொழியில் படிக்க வேண்டும் என்பதை பெற்றோர்கள்தான் தீர்மானிக்க வேண்டுமே தவிர, அரசாங்கம் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
தாய்மொழி கல்வி தொடர்பான வழக்கை விசாரித்த ஆர்.எம்.லோதா தலைமையிலான அமர்வு, அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு மட்டுமே இந்த உத்தரவுப் பொருந்தும் என்றும், அரசு பள்ளிகளுக்கு பொருந்தாது என்றும் கூறியிருக்கிறது.
இதேபோல், கல்வி உரிமைச் சட்டத்தில் 25 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கும் வழக்கு ஒன்றில், அரசு நிதி உதவி பெறும் தனியார் சிறுபான்மை பள்ளிகள் இட ஒதுக்கீடு வழங்க வேண்டாம் என்று உச்சநீதிமன்றம் உத்தரவுப் பிறப்பித்துள்ளது.

Social Plugin