முதுகலை ஆசிரியர் தேர்வை எழுதியவர் கள்,ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகத்தை(டி.ஆர்.பி.,), நேற்று மீண்டும்முற்றுகையிட்டனர்.
அரசு மேல்நிலைப் பள்ளிகளில், 2,895முதுகலை ஆசிரியர்கள் பணி
நியமனம், ஓராண்டாக இழுபறியில் இருந்துவருகிறது. தமிழ் பாடத்திற்கு மட்டும், இறுதிதேர்வு பட்டியல் வெளியிடப்பட்டு, பணிநியமனமும் நடந்து விட்டது; இதரபாடங்களுக்கு, எவ்வித நடவடிக்கையும்எடுக்கவில்லை. இறுதி பட்டியலைவெளியிடக்கோரி, தேர்வர்கள், கடந்த வாரம்,டி.ஆர்.பி., அலுவலகத்தைமுற்றுகையிட்டனர். நேற்றும், பலமாவட்டங்களில் இருந்து வந்த, 100 பேர்,டி.ஆர்.பி., அலுவலகத்தை முற்றுகையிட்டு,டி.ஆர்.பி., தலைவர், விபு நய்யாரை சந்தித்துபேசினர். அப்போது, ''சென்னைஉயர்நீதிமன்றத்தில், பல வழக்குகள்நிலுவையில் இருக்கின்றன. தற்போது,உயர்நீதிமன்றத்திற்கு, கோடை விடுமுறை.ஜூன் மாதம் தான், வழக்கு மீண்டும்விசாரணைக்கு வரும். வழக்கை விரைந்துமுடித்து, இறுதி பட்டியல் வெளியிடநடவடிக்கை எடுக்கப்படும்,'' என, விபு நய்யார்உறுதி அளித்தார். இதைத் தொடர்ந்துதேர்வர்கள், அங்கிருந்து கலைந்துசென்றனர்.
Social Plugin