Ad Code

Responsive Advertisement

ஓரிரு நாளில் விடைத்தாள் நகல் - தேர்வு துறை இயக்குனர் தகவல்.


''பிளஸ் 2 விடைத்தாள் நகல் கேட்டு விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கு, ஓரிரு நாளில், விடைத்தாள் நகல், தேர்வுத் துறை இணையதளத்தில், பதிவேற்றம் செய்யப்படும்,'' என, துறை இயக்குனர், தேவராஜன் தெரிவித்தார்.

அவர் கூறியதாவது:பிளஸ் 2, விடைத்தாள் நகல் கேட்டு, 80 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்தனர். மறுகூட்டல் கேட்டு, 3,000 பேர் விண்ணப்பித்தனர்.விடைத்தாள் நகல் கேட்ட மாணவர்களின், விடைத்தாள்கள், சென்னைக்குகொண்டு வரப்பட்டு, அவை, 'ஸ்கேன்' செய்யப்பட்டு வருகின்றன.இந்தப் பணி, மிக விரைவில் முடிவடையும். அதன்பின், ஓரிரு நாளில், ஜூன், 2ம் தேதிக்குள், விடைத்தாள் நகல்கள், தேர்வுத் துறை இணையதளத்தில், பதிவேற்றம் செய்யப்படும். ஒரே நாளில், 80 ஆயிரம் பேருக்குமான நகல்கள், பதிவேற்றம் செய்யப்படாது.பாட வாரியாக, வெவ்வேறு தேதிகளில், விடைத்தாள் நகல்கள், பதிவேற்றம்செய்யப்படும். மறு மதிப்பீட்டில், மதிப்பெண் குறையவும் வாய்ப்பு உள்ளது.எனவே, மாணவர்கள், தங்கள் பாட ஆசிரியரிடம், நன்றாக ஆலோசித்து, அதன்பின் விண்ணப்பிக்க வேண்டும்.இவ்வாறு, தேவராஜன் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement