Ad Code

Responsive Advertisement

முதல் தலைமுறை மாணவர்களுக்குச் சலுகை...

 தமிழகத்தில்  எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ்., பி.இ.ஆகிய தொழில் படிப்புகளில் சேரும்குடும்பத்தின் முதல் பட்டதாரிகள்(முதல்தலைமுறை) பிரிவைச்சேர்ந்தமாணவர்கள் கல்விக்கட்டணம்செலுத்துவதிலிருந்து
தமிழக அரசு ஒவ்வொரு ஆண்டும் விலக்குஅளித்து வருகிறது. எம்.பி.பி.எஸ்., பி.இ.படிப்புகளில் ஆண்டுக்கட்டணத்தில்தான்கல்விக் கட்டணம்இடம்பெறுவதால், கல்விக் கட்டணத்துக்குமட்டுமே முழு விலக்குச் சலுகை என்பதைப்புரிந்து கொள்ளவேண்டும்.அரசு மருத்துவக்கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். படிப்புக்குஆண்டுக் கட்டணம் ரூ.10,495. 

இந்தக் கட்டணத்தில் கல்விக் கட்டணம்ரூ.4,000-த்துக்கு மட்டும் முதல் தலைமுறைமாணவர்களுக்கு சலுகை அளிக்கப்படுகிறது.மீதமுள்ள தொகை ரூ.6,495-ஐ முதல்தலைமுறை தகுதி மாணவர்கள் செலுத்தியாகவேண்டும்.இதேபோன்று சுயநிதி மருத்துவக்கல்லூரிகளின் அரசு ஒதுக்கீட்டுஎம்.பி.பி.எஸ்.அல்லது அரசு ஒதுக்கீட்டு பி.டி.எஸ்.இடங்களில் சேரும் முதல் தலைமுறைதகுதியைப் பெறும் மாணவர்கள் ஆண்டுக்கட்டணம் ரூ.2.5 லட்சமாக இருக்கும்நிலையில், கல்விக் கட்டணம் ரூ.1.25லட்சத்தைச் செலுத்தத்தேவையில்லை.சுயநிதி மருத்துவக்கல்லூரிகளுக்கான அரசு ஒதுக்கீட்டுஎம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ் இடத்துக்கானமுழுச்சலுகைக்கான கல்விக் கட்டண விவரம்சுயநிதி கல்லூரிகளின் பெயருடன் விண்ணப்பதகவல் தொகுப்பேட்டில் அச்சிடப்படுகிறது.அதிலிருந்து கல்விக் கட்டணச் சலுகையைமுதல்தலைமுறை மாணவர்கள்தெரிந்துகொள்ளலாம்.எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ்படிப்புக்கு கடந்த கல்வி ஆண்டில் (2010-11)ஏற்றுக் கொள்ளப்பட்ட 17,610விண்ணப்பங்களில், முதல் தலைமுறை(குடும்பத்தில் முதல் பட்டதாரி) சலுகையைப்பெற விண்ணப்பித்த மாணவர்களின்எண்ணிக்கை6,440. இவர்களில் மருத்துவக்கல்லூரி அனுமதி கிடைத்து எம்.பி.பி.எஸ்.படிப்பில் சேர்ந்தோருக்கு கல்விக் கட்டணம்ரூ.4,000 சலுகை அளிக்கப்பட்டது.ஒருகுடும்பத்தில் முதல் முறையாக பட்டப்படிப்பைபடிக்க வரும்மாணவர்களுக்கு உதவி புரியவேண்டும் என்ற அடிப்படையில்தான் இந்தசலுகையை அரசு வழங்கியுள்ளது. அதன்படி,விவசாயக் குடும்பத்தில் இருந்தோ, கூலித்தொழிலாளியின் குடும்பத்தில் இருந்தோமுதல் முறையாக தொழில் கல்வியில்பட்டப்படிப்பை படிக்க வரும் மாணவ,மாணவியர், இந்த சலுகையை தவறாதுபயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

Ad Code

Responsive Advertisement