Ad Code

Responsive Advertisement

எகிப்திலும் அம்மா உணவக மாதிரி: பிரதிநிதிகள் ஆர்வம்

  • உணவகத்தை பார்வையிடும் எகிப்து அதிகாரிகள் |

எகிப்து அரசாங்கத்தின் சார்பில் தமிழ்நாட்டிற்கு வந்துள்ள அந்நாட்டு அதிகாரிகள், அம்மா உணவகங்களை பார்வையிட்டனர். குறைந்த விலைக்கு உணவு விற்கும் அரசாங்கத்தின் இந்தத் திட்டத்தை, தங்களது நாட்டிலும் ஆரம்பிக்க அவர்கள் ஆர்வம் காட்டியுள்ளனர்.


எகிப்து நாட்டின் வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தைச் சேர்ந்த அடெல் ரசக் மற்றும் அகமது கலீல், ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் இருக்கும் அம்மா உணவகத்தை இன்று பார்வையிட்டனர். 

இதைத் தொடர்ந்து அடெல் ரசக் பத்திரிக்கையாளர்களிடம் பேசியதாவது:

"இந்த உணவகங்களைப் பற்றி ஊடகங்களில் அடிக்கடி பார்ப்பதால் அதை பார்வையிட்டு, அதைப் பற்றித் தெரிந்து கொள்ள ஆர்வமாக இருந்தோம். இத்தகைய முயற்சிகளை தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மட்டுமே எங்களது நாட்டில் மேற்கொள்கின்றன. ஆனால் இங்கு அரசாங்கமே இப்படிப்பட்ட திட்டத்தை கொண்டு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது" என்றார் முன்னதாக  இவ்விருவரும் மாநகராட்சியைச் சேர்ந்த அதிகாரிகளைச் சந்தித்தனர். நேற்று மதுரையில் இருக்கும் அம்மா உணவகத்தையும் ஒரு பிரதிநிதி பார்வையிட்டார். சென்னையின் 200 வார்டுகளிலும் அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது. இதோடு தமிழகத்தில் இருக்கும் பெரிய அரசு மருத்துவமனைகளிலும் செயல்பட்டுவருகிறது. சமீபத்தில்தான், மாநிலம் முழுவதும் மேலும் பல அம்மா உணவகங்கள் ஆரம்பிக்கப்படும் என்று அரசு அறிவித்திருந்தது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement