அரசு ஊழியர்களிடமும், தி.மு.க.,வின் செல்வாக்கு சரிந்து வருவது, தேர்தல் முடிவுகளில் தெரிய வந்துள்ளது.
தமிழகத்தை பொறுத்தவரை, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களிடம், தி.மு.க.,விற்கு செல்வாக்கு அதிகம். காலம் காலமாக இதுதான் யதார்த்தமாக இருந்து வந்தது. ஆனால், அது தற்போதைய தேர்தல் மூலம் உடைக்கப்பட்டிருக்கிறது.
சரிவு:
அ.தி.மு.க., - தி.மு.க., ஆட்சி மாறி, மாறி வந்தாலும், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களில், பெரும்பாலானோர் தி.மு.க., ஆதரவாளர்களாக இருந்து வந்தனர். போலீசாரில் அ.தி.மு.க., விற்கு ஆதரவு அதிகம். சமீப காலமாக, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களிடம், தி.மு.க.,வின் செல்வாக்கு, வேகமாக சரிந்து வருகிறது. அவர்களின் ஓட்டு வங்கியை, அ.தி.மு.க., சத்தமின்றி கைப்பற்றி வருகிறது. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், போலீசார் ஓட்டு யாருக்கு போகிறது என்பதை, தபால் ஓட்டுகள் மூலம் அறிய முடிகிறது.
கடந்த, 2009ம் ஆண்டில் நடந்த லோக்சபா தேர்தலில், தபால் ஓட்டுகளில், 87.2 சதவீதம், தி.மு.க.,விற்கு ஆதரவாக இருந்தது. அ.தி.மு.க., 10.03 சதவீத ஓட்டுகளை மட்டும் பெற்றது. அடுத்து 2011 சட்டசபை தேர்தலில், தி.மு.க.,வின் செல்வாக்கு சற்று சரிந்து, அந்த கட்சிக்கு, 73.70 சதவீதம், தபால் ஓட்டுகள் பதிவானது. அ.தி.மு.க., ஓட்டு, 22.46 சதவீதமாக அதிகரித்தது. சமீபத்தில் முடிந்த, லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., ஓட்டு வங்கி, கணிசமாக அதிகரித்துள்ளது. அதேபோல், பிற கட்சிகளுக்கும் ஓட்டுகள் கூடுதலாக பதிவாகி உள்ளன. தபால் ஓட்டு தி.மு.க.,விற்குதான் என்ற நிலை, இந்த தேர்தலில் மாறியுள்ளது. இம்முறை, 39 லோக்சபா தொகுதிகளிலும், தி.மு.க.,விற்கு, 27,391 தபால் ஓட்டுகள் பதிவாகி உள்ளது சற்று குறைவாக, அ.தி.மு.க., 23,810 ஓட்டுகளும், பா.ஜ., கூட்டணி, 14,472 ஓட்டுகளும் பெற்றுள்ளன.
தபால் ஓட்டு:
சில தொகுதிகளில், தி.மு.க.,வை விட, அ.தி.மு.க., தபால் ஓட்டுகளை கூடுதலாக பெற்றுள்ளது. அதேபோல், தர்மபுரி, பொள்ளாச்சி, பெரம்பலூர் தொகுதிகளில், பா.ஜ., கூட்டணி, அதிக ஓட்டுகளை பெற்று உள்ளது. பா.ஜ., கூட்டணியில், பா.ஜ., - பா.ம.க., - ம.தி.மு.க., ஆகிய கட்சிகளுக்கு அதிக அளவில் தபால் ஓட்டுகள் பதிவாகி உள்ளன. ஆனால், தே.மு.தி.க.,விற்கு குறைவான ஓட்டுகளே பதிவாகி உள்ளன.
'நோட்டா':
அதேபோல், நோட்டாவிற்கும் கணிசமான ஓட்டுகள் பதிவாகி உள்ளன. ஓட்டுப் பதிவு இயந்திரத்தில், 5.82 லட்சம் பேர், நோட்டாவிற்கு ஓட்டளித்தனர். தபால் ஓட்டு போட்ட வர்களில், 840 பேர், நோட்டாவிற்கு ஓட்டளித்து உள்ளனர். பொதுமக்கள் ஓட்டுகள் மட்டுமின்றி அரசு ஊழியர் ஓட்டுகளிலும், பெரும் இழப்பு ஏற்பட்டிருப்பது, தி.மு.க.,வினரிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை