பள்ளி மாணவர்களுக்கான, இலவச பஸ் பாஸ் தயாரிக்கும் நிறுவனம், மூன்று நாட்களில் தேர்வு செய்யப்படவுள்ளது.
இதற்கிடையே, பள்ளிகளின் நிர்வாகத்தினர், பஸ் பாஸ் பெறுவதற்கான விண்ணப்பங்களை, போக்குவரத்துக் கழகங்களில் இருந்து பெற்று செல்கின்றனர். தமிழகத்தில் உள்ள எட்டு போக்குவரத்துக் கழகங்களின் சார்பில், 22 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த பஸ்களில், ஒன்றாம் வகுப்பு முதல், 12ம் வகுப்பு வரை, அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, இலவச பஸ் பாஸ் ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. மாணவ, மாணவியரின் புகைப்படத்துடன் கூடிய, "ஸ்மார்ட் கார்டு' ஆக, வழங்கப்படும் பஸ் பாசை, இந்தாண்டு, 30 லட்சம் மாணவர்கள் பெறுகின்றனர்.பஸ் பாஸ் தயாரிக்கும் பணிக்காக, சாலை போக்குவரத்து நிறுவனம் (ஐ.ஆர்.டி.,) சார்பில், கடந்த மாதம் டெண்டர், கோரப்பட்டது.
இதுகுறித்து, ஐ.ஆர்.டி., அதிகாரி ஒருவர் கூறுகையில், "டெண்டரில் பங்கேற்ற நிறுவனங்களில் இருந்து, தகுதியான நிறுவனத்தை தேர்ந்தெடுக்கும் பணி நடக்கிறது. மூன்று நாட்களுக்குள், பஸ் பாஸ் தயாரிக்கும் நிறுவனத்தை தேர்ந்தெடுத்து விடுவோம்' என்றார். இதற்கிடையே, மாணவர்களுக்கான பஸ் பாஸ் பெறுவதற்கான விண்ணப்பங்களை, போக்குவரத்துக் கழகங்களுக்கு நேரடியாக சென்று பெற்றுக் கொள்ளவும், இணையதளம் மூலம் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளவும், வசதி செய்யப்பட்டு உள்ளது.இதுகுறித்து, சென்னை மாநகர் போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் கூறியதாவது: இதுவரை, 150க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து, 60 ஆயிரம் விண்ணப்பங்களை நேரடியாக பெற்று சென்றுள்ளனர்.
பெரும்பாலான பள்ளி நிர்வாகத்தினர், இணையதளங்களில் இருந்து விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து வருகின்றனர். பஸ் பாஸ் தயாரிக்கும் நிறுவனம் தேர்ந்தெடுக்கப்பட்ட பின், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அவர்களிடம் வழங்கப்படும். பின், பஸ் பாஸ் தயாரிக்கப்பட்டு, மாணவர்களுக்கு வழங்கும் பணியை துரிதப்படுத்துவோம். மற்ற கழகங்களிலும், விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன.இவ்வாறு, அவர் கூறினார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை