Ad Code

Responsive Advertisement

'கல்பனா சாவ்லா' விருது விண்ணப்பங்கள் வரவேற்பு

 தமிழகத்தில், 'கல்பனா சாவ்லா' விருது பெற, பெண்களிடம் இருந்து, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தமிழக முதல்வர், ஒவ்வொரு ஆண்டும், சுதந்திர தின விழாவின் போது, துணிவு மற்றும் வீர சாகச
செயல் புரிந்த பெண்களுக்கு, 'கல்பனா சாவ்லா' விருது வழங்குகிறார். இவ்விருதில், 5 லட்சம் ரூபாய்க்கான காசோலை, ஒரு பதக்கம் ஆகியவை அடங்கும். தமிழகத்தை சேர்ந்த பெண்கள் மட்டுமே, இவ்விருதைப் பெற தகுதியுடையவர்கள். இந்த ஆண்டு, இவ்விருதை பெற விரும்புவோர், விரிவான தன் விவரக் குறிப்பு, உரிய விவரங்கள் மற்றும் அதற்குரிய ஆவணங்களுடன், 'அரசு முதன்மைச் செயலர், பொதுத்துறை, தலைமைச் செயலகம், சென்னை' என்ற முகவரிக்கு, ஜூன் 30ம் தேதிக்கு முன், அனுப்பி வைக்க வேண்டும். விருது பெறத் தகுதியுள்ளவரை, இதற்கென அரசால் நியமிக்கப்பட்ட, தேர்வுக் குழுவினர் தேர்வு செய்வர் என, பொதுத்துறை அரசு முதன்மை செயலர், யதீந்திரநாத் ஸ்வைன் தெரிவித்து உள்ளார்.

Ad Code

Responsive Advertisement