Ad Code

Responsive Advertisement

ஆசிரியர் கல்வியியல் நிறுவனங்களுக்கான வரைவு வழிகாட்டுதல்: கருத்துகள் வரவேற்பு

ஆசிரியர் கல்வியியல் கல்வி நிறுவனங்களுக்கான திருத்தப்பட்ட வரைவு வழிகாட்டுதல் பொதுமக்கள் மற்றும் கல்வி நிறுவனங்களின் கருத்துகளுக்காக வெளியிடப்பட்டுள்ளது.
இதன் மீதான கருத்துகளை ஜூன் 2-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சில் (என்.சி.டி.இ.) அறிவித்துள்ளது.

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, ஆசிரியர் கல்வியியல்
நிறுவனங்களுக்கான வழிகாட்டுதலை 6 மாதங்களுக்குள் தயாரிக்கும் பணியை என்.சி.டி.இ. மேற்கொண்டு வருகிறது.
இப்போது, வரைவு வழிகாட்டுதலைத் தயாரித்து முடித்துள்ள என்.சி.டி.இ., அதை பொதுமக்கள் மற்றும் கல்வியியல் நிறுவனங்களின் கருத்துகளுக்காக ஜ்ஜ்ஜ்.ய்ஸ்ரீற்ங்-ண்ய்க்ண்ஹ.ர்ழ்ஞ் என்ற இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.
இதன் மீதான கருத்துகளை ஹய்ண்ப்ள்ட்ன்ந்ப்ஹஃய்ஸ்ரீற்ங்-ண்ய்க்ண்ஹ.ர்ழ்ஞ் என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அல்லது பேராசிரியர் அனில் சுக்லா, துணைச் செயலர், என்.சி.டி.இ., பிரிவு-2, ஹான்ஸ் பவன், 1.பி.எஸ். ஸாஃபர் மாராக், புதுதில்லி - 110 002 என்ற முகவரிக்கு ஜூன் 2-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என என்.சி.டி.இ. தெரிவித்துள்ளது.
இந்தப் புதிய வழிகாட்டுதலின்படி, ஆசிரியர் கல்வியியல் கல்வி நிறுவனங்களில் கல்வித் தரத்தை உறுதி செய்யும் வகையில் தொடர் ஆய்வு மற்றும் கண்காணிப்பு முறை நடைமுறைப்படுத்தப்பட உள்ளது என்பதோடு, பி.எட்., எம்.எட். படிப்புகளின் படிப்புக் காலம் ஓராண்டிலிருந்து இரண்டு ஆண்டுகளாக உயர்த்தப்பட உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த புதிய வழிகாட்டுதல் ஜூலை மாதம் நடைமுறைக்கு வரும் எனத் தெரிகிறது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement