FOR ONLINE APPLICATION CLICK HERE....
தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகத்தில் இளநிலை படிப்பில் சேர விரும்புவோர் புதன்கிழமை (மே 14) முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அப்பல்கலைக்கழக துணைவேந்தர் பாஸ்கரன் மணிமாறன் தெரிவித்தார்.
தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்ட அவர் அளித்த பேட்டி:
தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகத்தின் அங்கமான தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் இளநிலை மீன்வள அறிவியல் பட்டப்படிப்பு, முதுநிலை பட்டப் படிப்பு மற்றும் முனைவர் பட்டப் படிப்பு ஆகியவை உள்ளன. நிகழ் கல்வியாண்டின் (2014-15) இளநிலை பட்டப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை புதன்கிழமை (மே 14) தொடங்குகிறது.
பல்கலைக்கழகத்தின் இணையதள முகவரியான ஜ்ஜ்ஜ்.ற்ய்ச்ன்.ர்ழ்ஞ்.ண்ய் மூலமாக விண்ணப்பங்களை அனுப்ப முடியும். இந்தப் படிப்பில் சேர ஜூன் 10-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். ஜூன் கடைசி வாரத்தில் தகுதிப் பட்டியல் வெளியிடப்பட்டு, ஜூலை மாதத்தில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடைபெறும். ஆகஸ்ட் மாதம் வகுப்புகள் தொடங்கும்.
விண்ணப்பங்களை இணையதளம் வாயிலாக பூர்த்தி செய்து அனுப்புவதற்கான இறுதி நாள் ஜூன் 10-ஆம் தேதி. விண்ணப்பக் கட்டணம் ரூ.600. பட்டியலினத்தவருக்கு ரூ.300. தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் வரைவோலையாக இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளபடி அனுப்ப வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு முதல்வர், மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தூத்துக்குடி 628 008 என்ற முகவரியிலோ 0461-2340554 என்ற தொலைபேசி எண்ணிலோ, dnfcri000gmail.com என்ற இ-மெயில் முகவரி மூலமோ தொடர்பு கொள்ளலாம். மீன்வளப் பல்கலைக்கழக இணையதளத்திலும் www.tnfu.org.in தெரிந்து கொள்ளலாம்.
பி.எப்.எஸ்ஸி. என அழைக்கப்படும் இந்த இளநிலை மீன்வள அறிவியல் பட்டப்படிப்பு (40 இடங்கள்) 4 ஆண்டு முழுநேரப் பட்டப் படிப்பாகும். ஆண்டுக்கு இரு பருவம் வீதம் மொத்தம் 8 பருவத் தேர்வுகள் நடத்தப்படும். இந்தப் படிப்பில் சேர விரும்புவோர் பிளஸ் 2, அதற்கு இணையான அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் பிற தேர்வில் உயிரியல் அல்லது விலங்கியல், தாவரவியல், இயற்பியல் மற்றும் வேதியியல் பாடம் படித்திருக்க வேண்டும் அல்லது இந்தப் பிரிவுகளில் தொழில்கல்வி படித்திருக்க வேண்டும்.
உயிரியல் அல்லது விலங்கியல், தாவரவியல் படிப்பில் பிற்பட்டோர் மற்றும் இதர பிரிவினர் 60 சதவீதமும், மிகவும் பிற்பட்டோர் 55 சதவீதமும் மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். பட்டியலினத்தவர் தேர்ச்சி பெற்றிருந்தாலும் விண்ணப்பிக்கத் தகுதியுடையவர் ஆவர்.
வேதியியல், இயற்பியல் ஆகிய இரண்டு பாடங்களிலும் சேர்த்து பிற்படுத்தப்பட்டோர், இதர பிரிவினர் 60 சதவீத மதிப்பெண்களையும், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 55 சதவீத மதிப்பெண்களையும், பட்டியலினத்தவர் தேர்ச்சி பெற்றிருந்தாலும் விண்ணப்பிக்கத் தகுதி உடையவர் ஆவர் என்றார்.
Social Plugin