Ad Code

Responsive Advertisement

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு வெளியாகும் இணையதளங்கள் -தினமணி

www.tnresults.nic.in www.dge1.tn.nic.in
www.dge2.tn.nic.in
www.dge3.tn.nic.in இவற்றில்
http://www.dge1.tn.nic.in 

என்ற இணையதள முகவரி மூலம் தேர்வர்கள்எளிதாக தேர்வு முடிவுகளை அறியும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 
இணையதளங்களில் தேர்வு முடிவுகளைகாண மாணவர்கள் தங்களது தேர்வெண்ணுடன் பிறந்த தேதியையும்அளிக்க வேண்டும்.



எஸ்.எம்.எஸ். மூலம் தகவல் அறிய: 
எஸ்.எம்.எஸ் குறுந்தகவல்மூலம் முடிவுகளை அறிய 09282232585 என்ற எண்ணுக்கு TNBOARD,தகவல் அனுப்ப வேண்டும். எடுத்துக்காட்டாக, “TNBOARD 1234567,25/10/1996” என்று குறுந்தகவல் அனுப்பினால், பதிவு எண்1234567 என்றும்,25/10/1996 என்பது பிறந்த தேதி எனவும் கொள்ளப்படும்.

23ம் தேதி காலை 10 மணிக்குப் பிறகுதான் எஸ்.எம்.எஸ் வசதிதுவக்கப்படும் என்பதால், அதற்கு முன்னதாக யாரும் குறுந்தகவல்அனுப்ப வேண்டாம். மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும், மாவட்டஆட்சியர் அலுவலகங்களில் இயங்கும் தேசீய தகவலியல்மையங்களிலும் (National Informatics Centre), அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணம் இன்றி தேர்வு முடிவுகளைஅறிந்துகொள்ளலாம். மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும்மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம்.தனித்தேர்வர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ்கள்
விநியோகம் செய்தல்: தனித்தேர்வர்கள் அவர்கள் தேர்வெழுதியமையங்களில் 23.05.2014 அன்றே மதிப்பெண் சான்றிதழ்களைப்பெற்றுக்கொள்ளலாம். தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் நாளன்றேதனித்தேர்வர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படுவதால்அவர்களின் தேர்வுமுடிவுகள் இணையதளத்தில்வெளியிடப்படவில்லை. எனவே, தனித்தேர்வர்கள் அனைவரும்தங்களது மதிப்பெண் சான்றிதழ்களை தாங்கள் தேர்வெழுதிய தேர்வுமையங்களிலேயே உடனடியாகப் பெற்றுக் கொள்ளுமாறுஅறிவுறுத்தப்படுகிறார்கள்.

மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் முறை : மதிப்பெண்கள்மறுகூட்டலுக்கு (Retotalling) Online முறையில் விண்ணப்பங்கள் வரவேற்றல் குறித்த செய்திக்குறிப்பு : 
மார்ச்/ஏப்ரல் 2014 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வில் தாம் தேர்வெழுதிய எந்தவொருபாடத்திற்கும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம். மார்ச்/ஏப்ரல் 2014  எஸ்.எஸ்.எல்.சி தேர்வெழுதிவிடைத்தாள்களின் மதிப்பெண்கள் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கவிழைவோர் 26.05.2014 (திங்கட்கிழமை) முதல் 31.05.2014 (சனிக்கிழமை) மாலை 5.00 மணி வரை பள்ளி மாணவர்கள் தங்கள் பள்ளிமூலமாகவும் தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வுமையம் மூலமாகவும் விண்ணப்பிக்க வேண்டும். மறுகூட்டல்கட்டணம் : இருதாட்கள் கொண்ட ஒவ்வொரு பாடத்திற்கும் : ரூ.305/- (மொழிப்பாடம் மற்றும் ஆங்கிலம்) ஒரு தாள் கொண்ட ஒவ்வொரு பாடத்திற்கும் : ரூ.205/- (கணிதம், அறிவியல் மற்றும் சமூகஅறிவியல்) 

மறுகூட்டலுக்கானகட்டணம் செலுத்தும் முறை : 
மறுகூட்டலுக்கான கட்டணத்தைபள்ளி மாணாக்கர் தாங்கள் பயின்ற பள்ளியிலும் தனித்தேர்வர்கள் தேர்வெழுதிய தேர்வு மையத்திலும் பணமாக செலுத்த வேண்டும். இடைநிலை சிறப்பு துணைத்தேர்வு, ஜூன் 2014 : மார்ச்/ஏப்ரல் 2014-ல்நடைபெற்ற இடைநிலைத் தேர்வில் தேர்ச்சி பெறாதோருக்கு நடத்தப்படும் சிறப்பு துணைத் தேர்வு ஜூன் மாத இறுதியில் நடைபெறவுள்ளது.  இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் பள்ளிமாணவர்கள், அவர்கள் பயின்ற பள்ளிகளிலும், தனித்தேர்வர்கள் அவர்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்களிலும் 26.05.2014 (திங்கட்கிழமை)  முதல் 30.05.2014 (வெள்ளிக்கிழமை) வரை தேர்வுக்கட்டணம்  ரூ.125/-ஐ பணமாக செலுத்தி தங்கள் பெயரைப்பதிவு செய்து கொள்ளலாம். இதற்கென தனி விண்ணப்பம் எதுவும்கிடையாது. தேர்வுக் கட்டணம் தவிர பதிவுக் கட்டணமாக ரூ.50/-ஐபள்ளியில் செலுத்த வேண்டும்

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement