Ad Code

Responsive Advertisement

அரசு ஊழியர் ஆசிரியர் ஓய்வு பெறும் வயதை 60 ஆக தமிழக அரசு உயர்த்த திட்டம்?

தமிழகத்தில் இந்த ஆண்டு சுமார் 1லட்சத்து 45000க்குமேல் அர்சு ஊழியர் ஆசிரியர்கள் ஓய்வு பெற உள்ளதாகவும், அவர்களின் ஓய்வுக்கால பணப்பலன்கள் என பல லட்சங்கள் வழங்க வேண்டி உள்ளதால் அவர்களுக்கு வழங்கவேண்டிய தொகை கணக்கிட்டு பார்த்ததில் இவ்வாண்டு தமிழக அரசுக்கு தாங்க முடியாத நிதிச்சுமை ஏற்படும் எனக்கணக்கிடப்பட்டுள்ளதாகவும் அச்சுமையை 2 ஆண்டுக்கு தள்ளிப்போடும் விதமாக ( சட்டசபை தேர்தலுக்கு பின்பு புதிய அரசு அமைந்தபின் நிதிச்சுமையை சமாளிக்கவும் ,அதற்குள் இரடண்டாண்டுகளில் அரசின் வருவாய் பெருக்க திட்டங்கள் வகுப்பதன் மூலமாகவும்,சமாளிக்கலாம் என்பதற்காக) அரசு ஊழியர் ஆசிரியர்களின் ஓய்வு பெரும் வயதை 60ஆக உயர்த்த திட்டமிடப்பட்டு அதன் மீது நிதித்துறை ,பணியாளர் நலத்துறை மட்டத்தில் கருத்துகள் கேட்கப்பட்டு முதல்வரின் முடிவுக்காககோப்பு தயாராக உள்ளதாக தகவல்............

முடிவு முதல்வர் கொடநாட்டில் இருந்து திரும்பியவுடன் முடிவெடுக்கப்படும் என தலைமைச்செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன அப்படி ஓய்வு பெறும் வயதை 60ஆக உயர்த்தப்பட்டால் புதிய ஆசிரியர்கள் பணியிடநியமன குறித்த நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும், தற்போதே போதிய மாணவர்களின்றி உபரி ஆசிரியர்கள் எண்ணிக்கை சில பல ஆயிரமாக உள்ளதால், ஓய்வு பெறும் வயதை 60ஆக உயர்த்தும்போது புதிய ஆசிரியர் நியமன வாய்ப்பே இல்லாமல் போகுவதோடு உபரி ஆசிரியர்களுக்கு வீணாக ஊதியம் கொடுக்க வேண்டி வருமே என்ற கருத்தும் உளவுவதாக தகவல் பார்ப்போம்
Thanks to-Veeraramprabu Thilagar

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement