Ad Code

Responsive Advertisement

ஜே.இ.இ., அட்வான்ஸ்டு தேர்வுக்கான பதிவு மே 4 முதல்...

2014ம் ஆண்டின் JEE அட்வான்ஸ்டு தேர்வுக்கான பதிவு செய்தல், மே 4ம் தேதி தொடங்கி, மே 9ம் தேதி வரை நடைபெறுகிறது.
எனவே, JEE மெயின் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள்www.jeeadv.nic.in என்ற வலைதளம் சென்று விண்ணப்பிக்கலாம்.
இதற்கு பதிவுசெய்ய, ஒரு மாணவர், தனது JEE மெயின் தேர்வின் Roll Number மற்றும் Password ஆகியவற்றுடன் sign - in செய்ய வேண்டும். JEE மெயின் தேர்வில், முதலாம் தாளில் ஒருவர் பெற்ற கட்-ஆப் மதிப்பெண்படி, அவர் அட்வான்ஸ்டு தேர்வெழுத தகுதியானவரா என்பதைப் பொறுத்தே, பதிவுசெய்தலை தொடர்ந்து மேற்கொள்ள அனுமதிக்கப்படுவார்.
பல்வேறான பிரிவுகளின் கட்-ஆப் மதிப்பெண்கள், மே 2ம் தேதி முதல், இணையதளத்தில் வெளியிடப்பட்டிருக்கும்.
JEE அட்வான்ஸ்டு தேர்வைப் பொறுத்தவரை, ஒருவர், அத்தேர்வை அதிகபட்சமாக 2 முறை மட்டுமே எழுதுவதற்கு அனுமதிக்கப்படுவார். அத்தேர்வை, அடுத்தடுத்த ஆண்டுகளிலும் தொடர்ந்து எழுதிக் கொள்ளலாம் என்பது கவனிக்கத்தக்கது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement