விருதுநகர் மாவட்டத்தில் குழந்தை தொழிலாளர்களாக இருந்து மீட்கப்பட்டு பள்ளியில் சேர்க்கப்பட்டு, பிளஸ் 2 தேர்வெழுதிய மாணவ, மாணவியர் 41 பேரில் 36 பேர் தேர்ச்சி பெற்றனர். அவர்களில் ஐந்துபேர் ஆயிரத்திற்கும் அதிகமான மதிப்பெண்களை பெற்றுள்ளனர்.
மாவட்டத்தில் செங்கல்சூளை, பட்டாசு ஆலை, தீப்பெட்டி ஆலை, அச்சகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பணிபுரிந்த குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டு, குழந்தை தொழிலாளர் சிறப்பு பயிற்சி பள்ளியில் சேர்க்கப்பட்டனர். அங்கு 5ம் வகுப்புவரை படித்த அம்மாணவ, மாணவியர், 6ம் வகுப்பில் ரெகுலர் பள்ளிகளில் சேர்க்கப்பட்டு, தொடர்ந்து கண்காணிக்கப்பட்டனர்.
Social Plugin