10–வது வகுப்பு தேர்வில் சென்னை சாந்தோம் மேல்நிலைப்பள்ளி மாணவர்
கோகுல்நாத் 500–க்கு 498 மதிப்பெண் பெற்று மாநில அளவில் 2–வது இடம்
பிடித்துள்ளார்.
தமிழில் மட்டும் 98 மதிப்பெண் பெற்று மற்ற பாடங்கள் அனைத்திலும் 100-க்கு 100 வாங்கியுள்ளார்.
கோகுல்நாத் குடும்பம் மிகவும் வறுமையில் வாழ்கிறது. இவரது தந்தை ராமச்சந்திரன் கடலில் மீன் பிடிக்கிறார். பகுதி நேரமாக ஆட்டோவும் ஓட்டுகிறார். தாயார் சுமதி. அக்காள் மணிமேகலை பிளஸ்–2 முடித்திருக்கிறார்.
வெற்றி குறித்து மாணவன் கோகுல்நாத் கூறியதாவது:–
10–ம் வகுப்பு தேர்வில் எப்படியாவது சாதனை படைக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. ஆனால் குடும்ப சூழ்நிலை வேறு விதமாக இருந்தது. அப்பா மீன் பிடித்தும், ஆட்டோ ஓட்டியும் எங்கள் குடும்பத்தை காப்பாற்றுகிறார்.
அவரது கஷ்டம் எப்போதும் என் கண் முன்னே நிற்கும். எனவே படிப்பில் சாதிக்க வேண்டும் என்று முடிவு செய்து கடினமாக உழைத்தேன். அதற்கு பலன் கிடைத்துள்ளது.
எங்கள் பள்ளி தலைமை ஆசிரியர் அருட் சகோதரர் ஜான்சன் மற்றும் ஆசிரியர்கள் எங்களுக்காக இரவு நேரத்திலும் சிறப்பு வகுப்புகள் நடத்தி ஊக்கம் அளித்தார்கள்.
நான் பிளஸ்–2வில் கம்யூட்டர் சயின்ஸ் படிக்க ஆசைப்படுகிறேன். தனியார் கம்பெனியில் சேர்ந்து சம்பாதிப்பதை விட நாட்டுக்காக சேவை செய்ய வேண்டும் என்பது எனது ஆசை.
அதற்காக கடற்படையில் சேர்வதே எனது லட்சியம். சென்னை மாணவர்கள் படிப்பில் மந்தமாக இருப்பதாக சொல்லப்படுகிறது. இதற்கு காரணம் படிப்பை விட பொழுது போக்கு அம்சங்களுக்கே அதிக ஆர்வம் காட்டுகிறார்கள்.
எல்லா பெற்றோரும் தங்கள் குழந்தைகள் படிக்க வேண்டும் என்றே பள்ளிக்கு அனுப்புகிறார்கள். பெற்றோர் படும் கஷ்டத்தை மாணவர்கள் நினைத்தாலே படிப்பில் சாதிக்க முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
சென்னை திருவல்லிக்கேணி மீனவர் குப்பத்தில் வசிக்கும் கோகுல்நாத் சாதனை படைத்த தகவலை அறிந்ததும், அவரது தந்தை ராமச்சந்திரன் குடும்பத்துடன் ஆட்டோவில் சாந்தோம் பள்ளிக்கு வந்தார். ஆட்டோவில் இருந்து கீழே இறங்கிய ராமச்சந்திரன் – சுமதி தம்பதியரின் கண்களில் இருந்து ஆனந்த கண்ணீர் வழிந்தது.
தங்கள் மகனை கட்டித் தழுவி முத்தம் கொடுத்த அவர்கள், ‘‘எங்கள் பிள்ளை சாதிச்சிட்டான்.. இனி எங்களுக்கு என்ன வேண்டும். இவன் சாதனைக்கு முன்பு எங்கள் வேதனை சிறு தூசுதான்.... கடற்படையில் சேர வேண்டும் என்பது அவனது ஆசை. கடவுள் அதை நிறைவேற்றி வைக்க வேண்டும்’’ என்று உணர்ச்சி வசப்பட்டனர்.
சாந்தோம் ரோசரி மெட்ரிக்குலேசன் பள்ளி மாணவி சுப்பு சுருதி 497 மதிப்பெண் பெற்று மாநிலத்தில் 3–வது இடம் பிடித்துள்ளார். திருவொற்றியூரைச் சேர்ந்த இவரது தந்தை மதிவாணன். தாய் சிவகாமி. வெற்றி குறித்து மாணவி கூறியதாவது:–
தினமும் 2 மணி நேரத்துக்கு மேல் படிப்பேன். தேர்வை நினைத்தால் கொஞ்சம் ‘டென்ஷன்’ ஆகத்தான் இருப்பேன். கடவுள் அருளாலும், ஆசிரியர், பெற்றோர் ஊக்கத்தாலும் இந்த சாதனை படைத்துள்ளேன். மகப்பேறு மருத்துவர் ஆக வேண்டும் என்பது லட்சியம். பிளஸ்–2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று சென்னை மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து படிக்க வேண்டும் என்பது ஆசை. அதற்காக இப்போதே தயாராகி வருகிறேன்.
இவ்வாறு மாணவி சுப்பு சுருதி கூறினார்.

0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை