Ad Code

Responsive Advertisement

நாளை பள்ளிகளில் பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் பணி தொடக்கம்

வேலூர் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களுக்கும் அந்தந்த பள்ளிகளில் புதன்கிழமை காலை 9 மணியளவில் சான்றிதழ் வழங்கும் பணி தொடங்கவுள்ளது.
அந்தந்த பள்ளிகளுக்கான மதிப்பெண் சான்றிதழ்கள் மாவட்ட கல்வித் துறையால் கடந்த சனிக்கிழமை வழங்கப்பட்டுள்ளது. 


மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழை வழங்குவதற்கு முன்பு அனைத்து சான்றிதழ்களையும் மிக கவனமாக சரிபார்க்கவும் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. ஏதேனும் பிழை இருப்பின் அந்த பிழையுள்ள சான்றிதழை உடனடியாக ஒப்படைத்து திங்கள்கிழமை மாலைக்குள் ஒப்படைக்கவும் அறிவுறுத்தப்பட்டது.
அப்படி பிழை உள்ள சான்றிதழ்கள் மாவட்ட கல்வித் துறையால் பெறப்படும் நிலையில் மறுநாளே புதிய சான்றிதழ் பெறப்பட்டு சம்மந்தப்பட்ட பள்ளிக்கு ஒப்படைக்கும் நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டத்தில், பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானபோது மாணவ, மாணவியர் சிலரின் பிறந்த ஆண்டு தவறாக இருந்ததால் தேர்வு முடிவுகளை இணையதளத்தில் பார்த்து தெரிந்துகொள்ள முடியாமல் போனது. அந்தந்த பள்ளிகளில் அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டிருந்த பட்டியலை பார்த்தபோதுதான் தவறு கண்டறியப்பட்டது.

இது தொடர்பாக மாவட்ட கல்வி நிர்வாகம் உடனடியாக பள்ளிக் கல்வித் துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து, சான்றிதழில் இத்தகைய பிழைகளை தவிர்க்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் உடனடியாக மேற்கொள்ளப்பட்டது.
மாணவ, மாணவியர்களிடம் சான்றிதழ் விநியோகம் செய்யும்போது எவ்வித கட்டணமும் வசூலிக்கக் கூடாது என அரசுத் தேர்வுகள் இயக்குநர் ஏற்கெனவே அறிவுறுத்தியுள்ளார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement