கீழ் வகுப்புகளில் கட்டாய தேர்ச்சி பெற வைப்பதால்தான், மாணவர்கள் பிளஸ் 2 தேர்ச்சியில் குறைந்த சதவீதத்தை அடைகின்றனர். இதற்கு தலைமை ஆசிரியர்களை மட்டும் குறை கூறுவதை ஏற்க முடியாது, என முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் பிளஸ் 2 பொது தேர்வில் 95.14 சதவீதம் தேர்ச்சி பெற்று மாநில அளவில் 6-வது இடம் பெற்றுள்ளது. இது கடந்த ஆண்டு தேர்ச்சியை விட 1.11 சதவீதம் அதிகம். ஆனால், தேர்ச்சி அளவு 80 சதவீதத்துக்கு குறைவாக உள்ள மூன்று பள்ளிகளின், தலைமை ஆசிரியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இதை பல்வேறு ஆசிரியர் அமைப்புகளும், கண்டித்து வருகின்றன. இதற்கு மாணவர்களும் ஒரு காரணம், தலைமை ஆசிரியர்களை மட்டும் குறை கூறுவதில் நியாயமில்லை என ஆசிரியர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன் கூறியதாவது:
தேர்ச்சி விகிதம் குறைய ஆசிரியர்கள் மட்டுமே காரணம் அல்ல. பல அரசு பள்ளிகளில், உட்கட்டமைப்பு, வசதியின்மை, கீழ் வகுப்புகளில் கட்டாய முழு தேர்ச்சி, தவறு செய்யும் மாணவர்களை கண்டிக்க கூட முடியாத சூழ்நிலை, மாணவர்களை நெறிபடுத்துவதற்கான நல்லொழுக்க வகுப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காத நிலை, ஆசிரியர்கள் மீது திணிக்கப்படுகின்ற இதர பல பணிகள் போன்றவைதான்.இவைகளை கருத்தில் கொள்ளாமல், ஆசிரியர்கள் மீது மட்டும் நடவடிக்கை எடுத்ததை, தமிழக அரசு கைவிட வேண்டும். இல்லையேல் தோழமை அமைப்புகளுடன் சேர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை