Ad Code

Responsive Advertisement

டிடிஎட் தேர்வுகள் ஜூன் 26ல் தொடக்கம்

தொடக்க கல்வி பட்டய (டிடிஎட்) படிப்பு இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கான தேர்வுகள் ஜூன் 26ம் தேதியும், முதலாண்டு மாணவர்களுக்கு ஜூலை 7ம் தேதியும் தொடங்குகிறது.



தொடக்க கல்வி பட்டயத் தேர்வு (டிடிஎட்) ஜூன் 2வது வாரத்தில் நடக்கும் என்று ஏற்கனவே தேர்வுத்துறை அறிவித்தது.ஜூன் மாதம் மேற்கண்ட தேர்வுகள் நடக்கும் போது டிஎன்பிஎஸ்சி நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்களுக்கான போட்டித் தேர்வு நடக்க உள்ளது. அதனால் டிடிஎட் தேர்வு எழுதுவோர் பாதிக்கப்படுவார்கள் என்றும், தேர்வுத் தேதியை ஒத்தி வைக்க வேண்டும் என்று கோரிக்கை வந்தது.
இதையடுத்து, டிடிஎட் தேர்வுகள் பாதிக்காத வகையில் தேதி மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதன்படி, டிடிஎட் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கான தேர்வுகள் ஜூன் 26ம் தேதி தொடங்கி ஜூலை 3ம் தேதி வரை நடக்கும். முதலாண்டு மாணவர்களுக்கான தேர்வுகள் ஜூலை 7ம் தேதி தொடங்கி 14ம் தேதிவரை நடக்கும். தேர்வுகள் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடக்கும்.மேற்கண்ட தேர்வுகளுக்கான அட்டவணை தேர்வுத்துறை இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement